வா வாத்தியார் திரை விமர்சனம்
தமிழ் சினிமாவில் டார்க் காமெடி என்ற ஜானரை வெற்றிகரமாக படமாக முதலில் கொடுத்த நலன் கூட்டணியில் கார்த்தி நடிப்பில் இன்று வெளிவந்துள்ள வா வாத்தியார் படமும் ரசிகர்களை கவர்ந்ததா? பார்ப்போம்.

கதைக்களம்
ராஜ்கிரண் தீவிர எம் ஜி ஆர் ரசிகர். இவர் எம் ஜி ஆர் படம் பார்க்கும் போது அவர் இறந்துவிட்டார் என்ற செய்தி வருகிறது. அழுத்துக்கொண்டே அங்கிருந்து வெளியே வர ராஜ்கிரணுக்கு பேரன் பிறக்கிறார்.
எம் ஜி ஆர் இறந்த அந்த நொடியே பேரன் பிறந்ததால் அவர் தான் அடுத்த எம் ஜி ஆர், நேர்மையாக வளர வேண்டும் என நினைக்கிறார்.

முதலில் அவரும் எம் ஜி ஆர் மாதிரி வளர, பிறகு ஒரு கட்டத்தில் நம்பியாரை இன்ஸ்பியர் ஆக்கி, தவறான வேலைகள் எல்லாம் செய்து போலிஸாகிறார்.
பிறகு மஞ்சள்முகம் என்ற ஹாக்கர் கும்பல் அரசாங்கத்திற்கு பெரும் தலைவலியாக அமைய, கார்த்தி அவர்களை பிடிக்க முயற்சி செய்ய, அதே நேரத்தில் கார்த்தி-ன் உண்மை முகம் ராஜ்கிரணுக்கு தெரியவர, பிறகு என்ன ஆனது என்பதே இந்த வா வாத்தியார்.

படத்தை பற்றிய அலசல்
கார்த்தி எந்த ரோல் என்றாலும் அதில் பிட் ஆவது அவருடைய ஸ்டைல், அதிலும் கொஞ்சம் நெகட்டிவ் ஷேட்ஸ் இருந்தால் கலக்கிவிடுவார், அப்படி நம்பியார் இன்ஸ்பிரிஷன் அப்றம் அவர் செய்யும் வேலைகள் கலாட்டாவாக இருக்க, பிறகு MGR ஆக மாறி அவர் காட்டும் மேனரிசம் எல்லாம் அடி தூள் தான், அதிலும் சண்டையில் கூட பெண்களை அடிக்க மாட்டேன் என்று காட்டும் ரியாக்ஸன் போன்றவை கார்த்தி சிக்ஸர் பெர்ப்பாமன்ஸ் தான்.
படத்தின் முதல் பாதி கார்த்தி எல்லா கோல்மால் வேலைகள் செய்து தன் தாத்தாவிற்கு தெரியாமல் பணம் சம்பாதிப்பது, அதை தெரிந்தவுடனே ராஜ்கிரண் இறக்க, எம் ஜி ஆர் மீண்டும் வருகிறார் என்ற கான்செப்ட் அடிபொலி தான்.

கார்த்தி தாண்டி படத்தில் நடித்த எல்லோருமே சிறப்பாக நடித்துள்ளனர். கீர்த்தி ஷெட்டிக்கு பெரியளவில் வேலை இல்லை என்றாலும் அவர் தான் எம் ஜி ஆர்-யை தெரிந்து கொள்கிறார் என காட்டிய விதன் நன்றாக இருந்தது.
நலன் படம் என்றாலே ஒன் லைனர் காமெடி சரவெடியாக இருக்கும், ஆனால், இதில் சீக்குவன்ஸாக காமெடி அமைத்துள்ளார், அதிலும் இரவில் எம் ஜி ஆர் தவறுகளை தட்டி கேட்கும் இடமெல்லாம் செம கலகலப்பு.

காலை மஞ்சள் முக குரூப்பை தானே தேட, இரவில் அந்த குரூப்பை அவரே காப்பாற்ற என கலாட்டா செய்துள்ளனர். இரண்டாம் பாதியில் கொஞ்சம் சீன்ஸ் ரிபிட்டட் போல் தெரிகிறது. இது தான் நடக்க போகிறது என்பது ஆடியன்ஸுக்கு தெளிவாக தெரிந்து விடுகிறது, இதனால் சுவாரஸ்யம் கம்மி என்றாலும் எங்கும் போர் அடிக்கவில்லை.
டெக்னிக்கல் ஒர்க் பொறுத்துவரை கேமரா, இசை என அனைத்தும் அற்புதம், அதிலும் சந்தோஷ் நாராயணன் பின்னணி இசை 60ஸ் இசையை இந்த தலைமுறைக்கு ஏற்றவாரு கொடுத்தது, எம் ஜி ஆர் பாடல்கள் ரீமிக்ஸ் என அவர் பங்கிற்கு சிக்ஸர் அடித்துள்ளார்.
க்ளாப்ஸ்
கதைக்களம்
கார்த்தி அசத்தலான நடிப்பு
டெக்னிக்கல் ஒர்க்
பல்ப்ஸ்
பழைய பட கான்செப்ட் தான் சொல்லி எடுத்தாலும், சில இடங்களில் சுவாரஸ்யம் குறைகிறது.
மொத்தத்தில் வா வாத்தியார்... அட வாத்தியார் வந்தாலே வெற்றி தானே.
