'வா வாத்தியார்' இரண்டே வாரத்தில் ஓடிடி-யில் ரிலீஸ் ஆனது.. எந்த தளத்தில் வந்திருக்கு பாருங்க
கார்த்தி - க்ரித்தி ஷெட்டி நடித்த வா வாத்தியார் படம் கடந்த வருடமே ரிலீஸ் ஆக இருந்தது. ஆனால் படத்தின் தயாரிப்பாளர் ஸ்டூடியோ க்ரீன் வாங்கிய கடன் திருப்பி செலுத்தாத காரணத்தால், நீதிமன்றம் ரிலீஸுக்கு தடை விதித்து இருந்தது.
அதன் பின் தாமதமாக பொங்கலுக்கு ஜனவரி 14ம் தேதி வா வாத்தியார் படம் ரிலீஸ் ஆனது. பெரிய எதிர்பார்ப்பு இருந்தாலும் படம் அதை பூர்த்தி செய்யவில்லை என்கிற விமர்சனம் தான் படத்திற்கு வந்தது.

ஓடிடி ரிலீஸ் ஆனது
இந்நிலையில் படம் வெளியாகி இரண்டு வாரங்கள் மட்டுமே ஆகும் நிலையில் இன்று ஓடிடியில் வா வாத்தியார் படம் ரிலீஸ் ஆகி இருக்கிறது.
அமேசான் ப்ரைம் தளத்தில் தான் இந்த படம் வெளிவந்திருக்கிறது.
a new superhero in a new avatar is coming to meet you 😎🔥#VaaVaathiyaarOnPrime, New Movie, Jan 28@Karthi_Offl @IamKrithiShetty #NalanKumarasamy @Music_Santhosh@VaaVaathiyaar @StudioGreen2 @gnanavelraja007 #Rajkiran #Sathyaraj #Anandaraj @GMSundar_ #Karunakaran… pic.twitter.com/jaweyUGM9c
— prime video IN (@PrimeVideoIN) January 27, 2026