வாடிவாசல் படத்தின் கதாநாயகி இவர் தானா.. முதல் முறையாக இணையும் ஜோடி
வாடிவாசல்
வெற்றிமாறன் - சூர்யா கூட்டணியில் பெரிதும் எதிர்பார்க்கப்படும் திரைப்படம் வாடிவாசல். இப்படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டு துவங்கும் என கூறப்படுகிறது.

கலைப்புலி எஸ். தாணு தயாரிப்பில் உருவாகும் இப்படத்திற்கான முன் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது என்கின்றனர். VFX காட்சிகளுக்கான முன் தயாரிப்பு பணிகளும் வெளிநாட்டில் நடைபெற்று வருகிறதாம். மேலும், படத்தில் உண்மையான காளையுடன் நடிக்க வேண்டும் என்பதற்காக, அதற்கான பயிற்சியிலும் சூர்யா ஈடுபட்டுள்ளார்.
கதாநாயகி
இந்த நிலையில், வாடிவாசல் திரைப்படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக நடிக்கப்போகும் நடிகை குறித்து தகவல் வெளியாகியுள்ளது. வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவரான ஐஸ்வர்யா லட்சுமி தான், வாடிவாசல் படத்தின் கதாநாயகி என கூறுகின்றனர்.

ஆனால், இதுகுறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளிவரவில்லை. நடிகை ஐஸ்வர்யா லட்சுமி தமிழில் பொன்னியின் செல்வன், கட்டா குஸ்தி ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
திருமணம் ஆகாமல் கருவுற்றால் அபராதம்! மணமுடிக்காமல் ஒன்றாக வாழ்ந்தால் 70 டொலர்..எங்கு தெரியுமா? News Lankasri
அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்த உடன்.. - 5 தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்த எடப்பாடி பழனிசாமி IBC Tamilnadu