வாடிவாசல் வெளிவர இன்னும் பல வருடங்கள் ஆகுமா.. ரசிகர்களுக்கு அதிர்ச்சி
வாடிவாசல்
கொடுத்த தகவல் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் திரைப்படங்களில் ஒன்று வாடிவாசல். சூர்யாவின் நடிப்பில் உருவாகவுள்ள இப்படத்தை வெற்றிமாறன் இயக்கவுள்ளார். அமீர் இப்படத்தில் வில்லனாக நடிக்கிறாராம்.

கலைப்புலி எஸ். தாணு தயாரிக்க ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். இப்படத்தின் அறிவிப்பு கடந்த சில ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த நிலையில், படப்பிடிப்பு தற்போது வரை துவங்கவில்லை.

இதற்கான முன் தயாரிப்பு பணிகள் ஒரு புறம் நடந்துகொண்டு இருந்தாலும் படப்பிடிப்பு துவங்காமல் இருப்பது ரசிகர்களுக்கு வருத்தத்தை கொடுத்தது. வாடிவாசல் படத்தின் CG வேலைகள் LA-வில் நடைபெற்று வருகிறது என தகவல் கூறப்படுகிறது.
லேட்டஸ்ட் அப்டேட்
இந்த நிலையில், வாடிவாசல் படத்தின் படப்பிடிப்பை இந்த ஆண்டு இறுதிக்குள் துவங்க முடிவு செய்துள்ளார்களாம். படப்பிடிப்பு 2 வருடங்கள் நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது.

இதை வைத்து பார்க்கலாம் வாடிவாசல் திரைப்படம் வெளிவருவதற்கு 2026 அல்லது 2027 ஆகிவிடும் என்கின்றனர்.
இந்த தகவலை பிரபல பத்திரிகையாளர் சக்தி கூறியுள்ளார். இவை அதிகாரப்பூர்வமான தகவல் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்கா ராணுவத்தில் களமிறங்கிய மாயாவி..! பென்டகன் கையிலெடுத்த Project Maven AI திட்டம் News Lankasri
புதன் உருவாகும் நீச்சபங்க ராஜயோகம்: ஏப்ரலில் இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! Manithan
ஈரான் தாக்குதலுக்கு பிரிட்டிஷ் இராணுவ தளம் பயன்படுத்தப்படாது! தெளிவுபடுத்திய பிரித்தானிய அரசு News Lankasri