அனைவரும் எதிர்பார்த்து காத்திருந்த வாடிவாசல் அறிவிப்பு.. புகைப்படத்துடன் மாஸ் அப்டேட்
வாடிவாசல்
ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் திரைப்படம் வாடிவாசல். இப்படத்தின் அறிவிப்பு வெளிவந்த சில வருடங்கள் ஆனாலும் கூட, படப்பிடிப்பு துவங்கவில்லை.
இயக்குநர் வெற்றிமாறன் விடுதலை படத்தில் பிஸியாக இருந்ததன் காரணமாக இப்படத்தின் படப்பிடிப்பு தள்ளிப்போய் கொண்டே இருந்தது. முதல் முறையாக சூர்யா - வெற்றிமாறன் கூட்டணி இப்படத்தின் மூலம் இணைகிறது. மேலும் கலைப்புலி எஸ் தாணு இப்படத்தை தயாரிக்கிறார்.
புகைப்படத்துடன் மாஸ் அப்டேட்
இப்படத்தின் அடுத்தகட்ட அப்டேட் எப்போது வெளியாகும் என்கிற கேள்வி அனைவரும் மத்தியிலும் இருந்தது. இந்த நிலையில், இன்று மாட்டுப் பொங்கல் பண்டிகை ஸ்பெஷலாக வாடிவாசல் குறித்து செம மாஸ் அப்டேட்டை கலைப்புலி எஸ். தாணு தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார்.
இந்த பதிவில், சூர்யா மற்றும் வெற்றிமாறனுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பதிவிட்டு, "அகிலம் ஆராதிக்க வாடிவாசல் திறக்கிறது" என கூறியுள்ளார். இதோ அந்த பதிவு..
அகிலம் ஆராதிக்க "வாடிவாசல்" திறக்கிறது#VetriMaaran @Suriya_offl#VaadiVaasal pic.twitter.com/ZPWfCDkF3C
— Kalaippuli S Thanu (@theVcreations) January 15, 2025