ஸ்டோர் ரூமில் கிடைத்த போட்டோ... மீனாட்சியின் சந்தேகத்திற்கு கிடைக்குமா விடை? வாகை சூடவா இன்றைய எபிசோட் அப்டேட்!

By Karthick Raja Aug 01, 2026 10:00 AM GMT
Report

தமிழ் சின்னத்திரையில் Zee தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 9:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான தொடர் வாகை சூடவா. கடந்த எபிசோடில் அப்பத்தாவின் நடவடிக்கைகளால் மீனாட்சிக்கு பல சந்தேகங்கள் எழுந்த நிலையில், இன்று கதையில் மேலும் பரபரப்பான திருப்பங்கள் காத்திருக்கின்றன.

ஸ்டோர் ரூமில் கிடைத்த போட்டோ... மீனாட்சியின் சந்தேகத்திற்கு கிடைக்குமா விடை? வாகை சூடவா இன்றைய எபிசோட் அப்டேட்! | Vaagai Sooda Va Serial Today Episode 01 08 2026

இன்றைய எபிசோடில், மீனாட்சி பூஜையறையில் மனம் நொந்து சாமி கும்பிடுகிறாள். "நான் இந்த வீட்டை விட்டு சீக்கிரமே போய்விடுவேன்... ஆனால் என் அக்காவை நீ தான் காப்பாற்ற வேண்டும்" என்று உருக்கமாக வேண்டிக்கொள்கிறாள். அப்போது எதிர்பாராத விதமாக அம்மனின் போட்டோ சுவரில் இருந்து கீழே விழப் போகிறது. சற்றும் தாமதிக்காமல் அதை தாங்கிப் பிடிக்கும் மீனாட்சி, போட்டோவை கழற்றி பார்த்தபோது அதனை தாங்கியிருந்த ஆணி தளர்ந்திருப்பதை கவனிக்கிறாள்.  

ஸ்டோர் ரூமில் கிடைத்த போட்டோ... மீனாட்சியின் சந்தேகத்திற்கு கிடைக்குமா விடை? வாகை சூடவா இன்றைய எபிசோட் அப்டேட்! | Vaagai Sooda Va Serial Today Episode 01 08 2026

அதை சரிசெய்ய சுத்தியலைத் தேடி ஸ்டோர் ரூமிற்குச் செல்லும் மீனாட்சிக்கு அங்கே ஒரு அதிர்ச்சி காத்திருக்கிறது. பல ஆண்டுகளாகத் திறக்கப்படாத பழைய பெட்டிக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு புகைப்படம் அவளது கவனத்தை ஈர்க்கிறது. அந்த புகைப்படத்தில் வீட்டில் இதுவரை பார்த்திராத ஒரு வயதான தாத்தாவும் பாட்டியும் இருப்பதை கண்டு மீனாட்சி குழப்பமடைகிறாள்.

ஸ்டோர் ரூமில் கிடைத்த போட்டோ... மீனாட்சியின் சந்தேகத்திற்கு கிடைக்குமா விடை? வாகை சூடவா இன்றைய எபிசோட் அப்டேட்! | Vaagai Sooda Va Serial Today Episode 01 08 2026

"இவர்கள் யார்? ஏன் இந்த போட்டோ இத்தனை நாட்களாக மறைத்து வைக்கப்பட்டது? இந்த குடும்பத்துடன் இவர்களுக்கு என்ன தொடர்பு?" என்ற கேள்விகள் மீனாட்சியின் மனதில் அடுத்தடுத்து எழுகின்றன. ஏற்கனவே அப்பத்தாவின் சில செயல்கள் மீது சந்தேகத்தில் இருந்த மீனாட்சிக்கு, இந்த புதிய கண்டுபிடிப்பு மேலும் மர்மத்தை கூட்டுகிறது.

ஸ்டோர் ரூமில் கிடைத்த போட்டோ... மீனாட்சியின் சந்தேகத்திற்கு கிடைக்குமா விடை? வாகை சூடவா இன்றைய எபிசோட் அப்டேட்! | Vaagai Sooda Va Serial Today Episode 01 08 2026

இந்த பழைய புகைப்படம் குடும்ப ரகசியத்தின் கதவைத் திறக்குமா? மீனாட்சி உண்மையை கண்டுபிடிப்பாரா? அல்லது புதிய பிரச்சனையில் சிக்கிக்கொள்ளப்போகிறாரா?

பல அதிரடி திருப்பங்களுடன் நகரும் வாகை சூடவா தொடரின் அடுத்த கட்ட பரபரப்பை காண தவறாதீர்கள், இன்று இரவு 9:30 மணிக்கு உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில்!

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US