பாகுபாடு காட்டும் அப்பத்தா.. உண்மையை கண்டுபிடித்த மீனாட்சி! - வாகை சூடவா இன்றைய எபிசோட் அப்டேட்

By Yathrika Jul 31, 2026 08:00 AM GMT
Report

வாகை சூடவா

Zee தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் வாகை சூடவா.

நேற்றைய எபிசோடில் அப்பத்தா, பாண்டி மற்றும் தேவி ஆகியோர் சேர்ந்து திட்டமிட்டு சுமதியை வீட்டை விட்டு வெளியேறச் செய்த நிலையில், இன்று கதையில் பல அதிரடி திருப்பங்கள் காத்திருக்கின்றன. சுமதி வீட்டை விட்டு சென்ற பிறகு, தேவி கொண்டு வந்த பையை மீனாட்சி திறந்து பார்க்கிறாள்.

பாகுபாடு காட்டும் அப்பத்தா.. உண்மையை கண்டுபிடித்த மீனாட்சி! - வாகை சூடவா இன்றைய எபிசோட் அப்டேட் | Vaagai Sooda Vaa July 31 Episode Update

அதில் சுமதியின் பொருட்கள் எதுவும் இல்லாமல், அப்பத்தாவின் துணிகள் மட்டுமே இருப்பதை கண்டு அதிர்ச்சியடைகிறாள். இதன் மூலம் சுமதியை வீட்டை விட்டு அனுப்பியது ஒரு திட்டமிட்ட சதி என்பதை மீனாட்சி புரிந்துகொள்கிறாள்.

இதனால் அப்பத்தா மீது அவளுக்கு சந்தேகம் வலுக்கிறது. அடுத்த நாள் அதிகாலையில் கோலம் போட எழும் மீனாட்சி, அப்பத்தா பாண்டியிடம் ரகசியமாக அதிகளவு பணம் கொடுத்து ஒரு குறிப்பிட்ட மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெறுமாறு அறிவுறுத்துவதை பார்த்து அதிர்ச்சியடைகிறாள். “இந்த சிகிச்சை எடுத்தால் நிச்சயம் குழந்தை பிறக்கும்” என்று அப்பத்தா கூறுவது மீனாட்சியின் மனதில் பல கேள்விகளை எழுப்புகிறது.

பாகுபாடு காட்டும் அப்பத்தா.. உண்மையை கண்டுபிடித்த மீனாட்சி! - வாகை சூடவா இன்றைய எபிசோட் அப்டேட் | Vaagai Sooda Vaa July 31 Episode Update

ஏற்கனவே வீட்டில் உள்ள மற்ற பேரன்களிடம் காட்டாத அக்கறையை பாண்டியிடம் மட்டும் காட்டுவது ஏன்? இந்த பாகுபாட்டின் பின்னணியில் என்ன ரகசியம் இருக்கிறது? என்ற சந்தேகம் மீனாட்சியை வாட்டத் தொடங்குகிறது. இதற்கிடையில், வீட்டிற்கு பால் வாங்க பணம் தேவைப்படுவதால் லோகு அப்பத்தாவிடம் உதவி கேட்கிறான்.

ஆனால் வழக்கம்போல அவனை அவமானப்படுத்தி அனுப்பிவிடுகிறாள் அப்பத்தா. பின்னர் சக்தியிடம் உதவி கேட்க, அவரும் கையில் பணம் இல்லை என கூறுகிறார். லோகுவின் நிலையை பார்த்து வருந்தும் மீனாட்சி உடனே ரூ.500 கொடுத்து உதவுகிறாள்.

அதன்பிறகு லோகுவுடன் அவரது டெய்லரிங் கடைக்கு செல்லும் மீனாட்சி, அங்கு சுவர்கள் முழுவதும் நடிகர்களின் புகைப்படங்கள் அலங்கரித்திருப்பதை கவனிக்கிறாள். இதுகுறித்து விசாரிக்கும்போது, நடிகராக வேண்டும் என்பது லோகுவின் நீண்டநாள் கனவு என்பதை அறிகிறாள்.

பாகுபாடு காட்டும் அப்பத்தா.. உண்மையை கண்டுபிடித்த மீனாட்சி! - வாகை சூடவா இன்றைய எபிசோட் அப்டேட் | Vaagai Sooda Vaa July 31 Episode Update

லோகுவின் ஆசையையும், அவன் இதுவரை சந்தித்த ஏமாற்றங்களையும் கேட்டு மனம் உருகும் மீனாட்சி, எப்படியாவது அவனது கனவை நனவாக்க வேண்டும் என்று உறுதியான முடிவெடுக்கிறாள்.

ஆனால் அவளது இந்த முயற்சி வெற்றி பெறுமா? அப்பத்தாவின் ரகசிய திட்டம் என்ன? சுமதிக்கு நடந்த அநீதிக்கு மீனாட்சி நீதி கிடைக்கச் செய்வாளா? பரபரப்பும், எதிர்பார்ப்பும் நிறைந்த இந்த திருப்பங்களை தெரிந்துகொள்ள வாகை சூடவா சீரியலை தவறாமல் காணுங்கள்! 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US