தேனுவின் கருவை கலைக்கத் தயாரான அப்பத்தா.. பரபரப்பின் உச்சத்தில் வாகை சூடவா!

By Karthick Raja Sep 01, 2026 10:10 AM GMT
Report

தமிழ் சின்னத்திரையில் Zee தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 9:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான தொடர் வாகை சூடவா. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் தேன்மொழி கர்ப்பமாக இருப்பது தேவிக்கு தெரிய வந்த நிலையில், இன்று நடைபெறவுள்ள அதிரடி சம்பவங்கள் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.

தேனுவின் கருவை கலைக்கத் தயாரான அப்பத்தா.. பரபரப்பின் உச்சத்தில் வாகை சூடவா! | Vaagai Sooda Vaa Today Episode 31St August 2026

அதன்படி, யாருக்கும் தெரியாமல் தேன்மொழி ரூமை விட்டு வெளியே வரும் தேவி, அப்பத்தாவை சந்தித்து கண்கலங்குகிறார். என்ன நடந்தது என்று அப்பத்தா கேட்டபோது, தனது கையில் இருந்த குங்குமப்பூ டப்பாவை அவரிடம் கொடுக்கிறார். அதை பார்த்த அப்பத்தா, “கர்ப்பமான பெண்கள் சாப்பிட வேண்டியதுதானே இது? நீ கர்ப்பமானால் நானே உனக்கு வாங்கித் தந்திருப்பேனே. இப்போது எதற்கு இதை கொண்டு வந்திருக்கிறாய்?” என்று கேட்கிறார்.

அதற்கு தேவி, சுமதி இந்த குங்குமப்பூவை தேன்மொழிக்காக வாங்கிக் கொடுத்து சென்றதாக கூறுகிறார். மேலும், தேன்மொழி கர்ப்பமாக இருப்பது உண்மை என தெரிவிக்கிறார். இதைக் கேட்ட அப்பத்தா அதிர்ச்சியடைந்து கோபத்தில் உலக்கையை எடுக்கிறார்.

பின்னர் சில மூலிகைகளை இடித்து கசாயம் தயாரிக்கும் அப்பத்தா, தேன்மொழியை அழைக்கிறார். அவர் வந்ததும் டம்ளரில் இருந்த கசாயத்தை கொடுத்து குடிக்கும்படி கூறுகிறார். எதுவும் சந்தேகிக்காத தேன்மொழி அதை வாங்கிக் குடிக்க முயல்கிறாள்.

தேனுவின் கருவை கலைக்கத் தயாரான அப்பத்தா.. பரபரப்பின் உச்சத்தில் வாகை சூடவா! | Vaagai Sooda Vaa Today Episode 31St August 2026

அந்த நேரத்தில், “இதைக் குடித்தால் கரு கலைந்து விடும்” என்று அப்பத்தா கூற, தேன்மொழி அதிர்ச்சியில் உறைந்து விடுகிறாள். அவளது தயக்கத்தை கவனிக்கும் அப்பத்தா, “ஏன் குடிக்கவில்லை? அப்படியானால் நீ கர்ப்பமாக இருப்பது உண்மையா?” என்று ஆவேசமாக கேட்கிறார்.

அப்போது மீனாட்சி மற்றும் ஜீவா, “அவள் கர்ப்பமாக இருந்தால் அதில் என்ன தவறு?” என்று கேள்வி எழுப்புகின்றனர். ஆனால் அப்பத்தா அதைக் கேட்காமல், “என் பேத்தி கர்ப்பமாகால் யார் கர்ப்பமாக இருப்பதையும் நான் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டேன்” என்று கோபமாக பதிலளிக்கிறார்.

இறுதியாக, அந்த கசாயத்தை தேவியிடம் கொடுத்த அப்பத்தா, “இதைக் கொண்டு அவள் வாயில் ஊற்றி விடு” என்று உத்தரவிடுகிறார். இதனால் அடுத்ததாக என்ன நடக்கப் போகிறது என்ற பதட்டம் உச்சத்தை எட்டியுள்ளது.

தேனுவின் கருவை கலைக்கத் தயாரான அப்பத்தா.. பரபரப்பின் உச்சத்தில் வாகை சூடவா! | Vaagai Sooda Vaa Today Episode 31St August 2026

தேன்மொழியின் கர்ப்பம் காப்பாற்றப்படுமா? அப்பத்தாவின் முடிவை மாற்ற யாராவது முன்வருவார்களா? பரபரப்பான திருப்பங்களுடன் தொடரும் வாகை சூடவா சீரியலை Zee தமிழ் தொலைக்காட்சியில் தவறாமல் காணுங்கள்.  

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US