வெறித்தனமான சீனை படத்திலிருந்து தூக்கிய எஸ்.ஜே. சூர்யா.. காரணம் அஜித் தானா
வாலி
அஜித் - எஸ்.ஜே. சூர்யா கூட்டணியில் வெளிவந்த படம் வாலி. இது எஸ்.ஜே. சூர்யாவின் முதல் படம் என்பது நாம் அனைவரும் அறிவோம்.
அதே போல் இன்று வரை அஜித்தின் திரைவாழ்க்கையில் மாபெரும் வெற்றியடைந்த படங்களில் வாலியும் ஒன்று. இப்படத்தில் அண்ணன் தம்பி என இரட்டை வேடத்தில் நடித்து அசத்தியிருப்பார் அஜித்.
இந்நிலையில், இப்படத்தில் துணை இயக்குனராக பணிபுரிந்த மாரிமுத்து வாலி படத்தில் இடம்பெறாமல் போன செம வெறித்தனமான காட்சி குறித்து பேசியுள்ளார்.
அவர் கூறியதாவது :
படத்தில் இடம்பெறும் காட்சி ஒன்றில் தனது கணவர் என நினைத்து கணவரின் அண்ணனை சிம்ரன் கட்டிப்பிடித்து விடுவார். இதனால் மனமுடைந்துபோய் இருப்பார் சிம்ரன்.
இதன்பின் இந்த குழப்பம் தன்னுடைய மனைவிக்கு வரக்கூடாது என்று நினைத்து தனது மீசையை எடுத்திருப்பார் அஜித். இதன்முலம் இனி யார் அண்ணன் யார் தம்பி என எளிதில் நீ கண்டுபிடித்து விடலாம் என்று சிம்ரனிடம் அஜித் கூறுவார்.
இதை அண்ணனிடம் காட்டிவிட்டு வரலாம் வா என்று சிம்ரனை அஜித் அழைத்து செல்வார். அங்கு சென்று பார்த்தல் அண்ணன் அஜித்தும் தனது மீசையை எடுத்திருப்பார். இது தான் அந்த காட்சி..
படத்தை பார்க்கும் அனைவருக்கும் இது கண்டிப்பாக செம சீனாக அமைத்திருக்கும். ஆனால், அஜித் தன்னுடைய மீசையை எடுக்கமாட்டேன், வேறொரு படத்தில் கமிட்டாகி இருக்கிறேன் அதனால் மீசையை எடுக்கமாட்டேன் என்று கூறிவிட்டதால், அந்த காட்சியை படத்தில் வைக்க முடியவில்லை என மாரிமுத்து கூறியுள்ளார்.
வயிற்று வலியால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகர் பிரபு.. தற்போது எப்படி இருக்கிறார்