வாலி படத்தில் சிம்ரன் வேடத்தில் நடிக்க முதலில் இத்தனை நடிகைகளிடம் பேசப்பட்டதா?

ajith meena simran vaali sjsuryah
By Yathrika May 03, 2021 06:20 AM GMT
Report

எஸ்.ஜே. சூர்யா சிறந்த நடிகராக தமிழ் சினிமாவில் இப்போது வலம் வந்து கொண்டிருக்கிறார்.

பலருக்கு அவரை நடிகன் என்பதை தாண்டி இயக்குனராக அதிகம் பிடிக்கும். அவர் இயக்கிய வாலி, குஷி படங்களுக்கு ரசிகர்கள் அவ்வளவு பெரிய ஆதரவு கொடுத்துள்ளார்கள்.

அண்மையில் ஒரு தொலைக்காட்சியில் அஜித் நடித்த வாலி திரைப்படம் ஒளிபரப்பானது. தற்போது இந்த படம் குறித்து ஒரு தகவல் பரவி வருகிறது.

அதாவது படத்தில் அஜித்திற்கு ஜோடியாக சிம்ரன் நடித்திருப்பார், ஆனால் படக்குழு தேர்வு முதலில் இவர் இல்லையாம். பாலிவுட் நாயகி கிரண் என்பவரை அணுகியுள்ளார்கள், அவர் வேறொரு பிரச்சனையால் முடியாது என்று கூற பின் நடிகை மீனாவை அணுகியுள்ளார்கள்.

அவரும் வேறு காரணத்தால் படத்தில் நடிக்க முடியாது என்று கூற பின் சிம்ரனுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.

அதேபோல் படத்தில் ஜோதிகா வேடத்தில் நடிக்க நடிகை மீனாவை கேட்டுள்ளார்கள், அவர் க்ரீன் சிக்னல் தராததால் பின் ஜோதிகா நடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது. 


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US