அடடே! வாணி போஜன் இந்த தோற்றத்துல அழகா இருக்கீங்களே! லேட்டஸ்ட் புகைப்படங்கள்!
நடிகை வாணி போஜன் சின்னத்திரையில் தெய்வமகள் சீரியல் சத்யாவாக மக்கள் மனதில் இடம் பிடித்தவர். இதனால் நல்ல வரவேற்பு அவருக்கு கிடைத்ததையடுத்து படத்திலும் ஹீரோயினாக அறிமுகமானார்.
அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைக்கப்பெற்று தொடர்ந்து நடித்து வரும் அவர் சூர்யாவின் 2D நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தில் இணைந்துள்ளார். இதன் பட பூஜைகள் நேற்று நடைபெற்றுள்ளன.
அதிகாரம் 79, ஓர் இரவு ஆகிய படங்களில் நடித்திருந்த அவருக்கு ஓ மை கடவுளே படம் சிறப்பான அந்தஸ்தை பெற்றுத்தந்தது. நடிகர் வைபவ் உடன் அவர் நடித்துள்ள லாக்கப் படம் ஓடிடி தளத்தில் வெளியானது குறிப்பிடத்தக்கது.
வாணி போஜனுக்கு ரசிகர்கள் நிறைய எண்ணிக்கையில் இருக்கிறார்கள். சமூக வலைதளங்களில் அவரை அதிகமானோர் பின் தொடர்கிறார்கள். நேற்று அவர் நடத்திய போட்டோ ஷூட் புகைப்படங்கள் ரசிகர்கள் கண்களை கவர்ந்துள்ளன.


