இணையத்தில் தீயாய் பரவி வரும் 'வாத்தியாரே' மீம் - உலகளவில் செம ரீச்
பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் சமீபத்தில் நேரடியாக ஓடிடி-யில் வெளியான திரைப்படம் சார்பட்டா பரம்பரை.
இப்படத்தில் ஆர்யாவுடன் இணைந்து பசுபதி, கலையரசன், துஷாரா விஜயன், கிஷோர் உள்ளிட்ட பல நடிகர், நடிகைகள் நடித்திருந்தார்.
இதில் நடிகர் பசுபதி ஏற்று நடித்திருந்த ரங்கன் வாத்தியார் கதாபாத்திரம் மாபெரும் அளவில் வரவேற்பை பெற்றது.

அதிலும், ரங்கன் வாத்தியாரை பார்த்து, ஆர்யா கூறும், வாத்தியாரே எனும் வசனம் மிகப்பெரிய அளவில் ரசிகர்களால் ரசிக்கப்பட்டது.
இதையடுத்து, அந்த ஒரே ஒரு புகைப்படத்தை வைத்து கொண்டு பல மீம்-கள் சமூக வலைத்தளத்தில் வெளியாக துவங்கியது.

இந்நிலையில் நெட்பிளிக்ஸ் இந்திய நிறுவனம், அந்த வசனத்தை போலவே, உலகளவில் பிரபலமான Money Heist Professer கதாபாத்திரத்தை வைத்து பதிவு ஒன்று வெளியிட்டுள்ளார்.
இதனால், சார்பட்டா பரம்பரை படத்தில் வந்திருந்த அந்த ஒரே வசனம் தற்போது உலகவில் தீயாய் பரவி வருகிறது.
Heist na enna nu enakku solli koduthathae nee dhaan vaathiyaare ❤️ pic.twitter.com/FEFUsVqNk4
— Netflix India (@NetflixIndia) August 9, 2021