வாழ 2 திரை விமர்சனம்
சவின் இயக்கத்தில் இளைஞர்களை மையப்படுத்தி இன்று பிரமாண்டமாக வெளிவந்துள்ள படம் வாழா 2, ஏற்கனவே வாழா படம் மெகா ஹிட் அடிக்க, அதன் இரண்டாம் பாகமான இதுவும் அந்தளவிற்கு ஹிட் அடித்ததா? பார்ப்போம்.

கதைக்களம்
பள்ளி பருவத்திலிருந்து கதை ஆரம்பிக்கிறது, ஹசிர், ஆலன் 2 பேரும் சிறு வயதிலிருந்தே நண்பர்களாக இருக்கின்றனர், ஆலன் தங்கச்சியை அஜின் என்ற பள்ளி தோழன் ஒருவன் காதலிக்கிறார்.
இதனால் இவர்களுக்குள் சண்டை வர, அதை தொடர்ந்து மோகன் லால் படத்திற்கு செல்லும் போது அஜினுக்கு ஒரு பிரச்சினை வர, அவர்களுக்கு ஆதரவாக ஹசிர், ஆலன் வர பிறகு ஹசிர், ஆலன், அஜின், விநாயக் என அனைவரும் நண்பர்கள் ஆகின்றனர்.

அந்த நேரத்தில் அந்த பள்ளியில் மாணவர்களை எப்போதும் அடித்துக்கொண்டே இருக்கும் ஒரு ஆசிரியர், இவர்கள் எல்லோரும் பள்ளியில் மொபைல் பயன்படுத்துவது, ஒருவரை ஒருவர் காதலிக்கிறார்கள் என்பதை தெரிந்துக்கொண்டு அவர்கள் பெற்றோரை அழைத்து கண்டிக்கின்றனர்.
அதில் ஒரு கட்டத்தில் ஆலன் தங்கச்சியை அந்த ஆசிரியர் தவறாக பேச, ஹசிர் ஆலன் அந்த ஆசிரியரை அடிக்க, பள்ளி நிர்வாகம் அவர்களுக்கு டிசி தருகிறது, அதை தொடர்ந்து இவர்கள் வாழ்க்கை என்ன ஆனது என்பதே மீதிக்கதை.

படத்தை பற்றிய அலசல்
நம்ம ஊர் காஞ்சனா சீரிஸ் போல் இந்த வாழ சீரிஸ் செம ஹிட் அடிக்கும் போல 2,3,4 என்று, அந்தளவிற்கு முந்தைய படத்தின் சாயலில் அப்படியே இந்த இரண்டாம் பாகத்தையும் எடுத்து வைத்துள்ளனர்.
ஆனால், என்ன இந்த கால ட்ரெண்ட் இளைஞர்களின் பிரதிபலிப்பாக அவர்களின் ஆட்டம், பாட்டம், எமோஷ்னல் என எடுத்து இந்த முறையும் இயக்குனர் சான்வி ஹிட் அடித்துள்ளார். ஹசிர், ஆலன், அஜின், விநாயக் இந்த 4 இளைஞர்கள் வாழ்க்கையை தான் நமக்கு படம் பிடித்து காட்டியுள்ளனர், படிக்கின்ற வயதில் ஒழுங்காக படிக்காமல் இருப்பது, பின்நாளில் எவ்ளோ கஷ்டத்தை கொடுக்கும் என்பதை காட்டியதற்காகவே வாழ்த்துக்கள்.

அதோடு சில காட்சிகள் வந்தாலும் அல்போன்ஸ் புத்திரன் வாத்தியார்களுக்கு அட்வைஸ் செய்யும் காட்சி தியேட்டரில் க்ளாப்ஸ் பறக்கின்றது, அதேபோல் அஜு வர்கீஸ் சில காட்சி தலையை காட்டி மனதை நெகிழ வைக்கிறார்.
அது மட்டுமின்றி படத்தில் ஒரு சில கதாபாத்திரம் காமெடியாக வந்தாலும் சரி கடுகடுவென வந்தாலும் சரி கடைசியில் நெகிழ வைக்கின்றனர், அதில் ஜானி சின்ஸ் ரெபரன்ஸில் வருபவர், விநாயக் வேலைபார்க்கும் வீட்டு ஓனர் என சிலர் மனதில் நிற்கின்றனர்.

அதே நேரத்தில் படத்தின் முதல் பாதி செம கலாட்டவாக செல்ல, இரண்டாம் பாதி செண்டிமெண்ட் காட்சி ஆரம்பிக்கும் போதே, இது தானே நடக்கபோகிறது, என்பதை ரன்னிங் கமெண்ட்ரி ஆகவே கொடுக்கின்றனர், அந்தளவிற்கு வாழ முதல் பாகம் தாக்கம் உள்ளது.
இன்னும் 10 பாகம் எடுத்தாலும் ஓடும், அதே நேரத்தில் அரண்மனை, காஞ்சனா போல் சலிப்பு தட்டினாலும் ஹிட் அடிக்கும் கண்டெண்ட் ஆகவே இந்த வாழ பார்க்கப்படும். டெக்னிக்கல் விஷயங்களாக படத்தின் ஒளிப்பதிவு அப்படியே கேரளா, கல்ப், யுகே என அனைத்தையும் கண் முன் கொண்டு வருகிறது, அன்கீத் மேனன் இசையும் சூப்பர்.
க்ளாப்ஸ்
படத்தின் முதல் பாதி
படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் வரும் 4 நடிகர்கள் பங்களிப்பு, குறிப்பாக சில காட்சிகளே வரும் அல்போன்ஸ், அஜு வர்கீஸ்.
யதார்த்தமான காட்சி அமைப்புக்கள்.
கிளைமேக்ஸ் வாழ முந்தைய பாக ரெபரன்ஸ்
பல்ப்ஸ்
இரண்டாம் பாதி இதுதான் நடக்கும் என்று சொல்லி வைத்தார் போல் நகரும் திரைக்கதை.
மொத்தத்தில் வாழ 2 இளைஞர்கள் இருக்கும் வரை வாடவே வாடது இந்த வாழ
