8 நாட்களில் வாழை படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா
வாழை
தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குனராக மாறியுள்ளார் மாரி செல்வராஜ். இவர் இயக்கத்தில் கடந்த வாரம் வெளிவந்து மாபெரும் அளவில் வெற்றியடைந்துள்ள திரைப்படம் வாழை.
இதுவரை இவர் இயக்கத்தில் வெளிவந்த பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன் ஆகிய மூன்று படங்களின் வெற்றியை தொடர்ந்து நான்காவதாக வெளிவந்த வாழை படமும் மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.
உண்மை சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படத்தில் கலையரசன், திவ்யா துரைசாமி, நிகிலா விமல் உள்ளிட்டோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். மேலும் சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.
வசூல்
இந்த நிலையில், 8 நாட்களில் வாழை திரைப்படம் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் உலகளவில் 8 நாட்களில் ரூ. 17.7 கோடி வரை வசூல் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்தியாவில் இன்றும் பிரிட்டிஷுக்கு கீழே இயங்கும் ஒரே ஒரு ரயில் நிலையம்.., எது தெரியுமா? News Lankasri
