கர்நாடகாவை விட்டு விரட்டிவிடுவோம்.. யாஷை தாக்கிய நடிகை
யாஷ் நடித்து இருக்கும் டாக்சிக் படத்தின் டீஸர் வெளியானதில் இருந்தே தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கி வருகிறது. அதற்கு காரணம் அந்த படத்தில் வரும் காட்சிகள் தான்.
இந்த படத்திற்கு தற்போது சென்சார் போர்டு ஏ சான்றிதழ் வழங்கி இருக்கிறது. 3 மணி நேரம் 14 நிமிடங்கள் ஓடும் இந்த படம் வரும் ஆகஸ்ட் 26ம் தேதி திரைக்கு வருகிறது.

தாக்கி பேசிய நடிகை
இந்நிலையில் டாக்சிக் படம் தொடர்பாக கன்னட நடிகை ரிஷிகா சிங் என்பவர் கடுமையாக விமர்சித்து பேசி இருக்கிறார்.
"கன்னட சினிமா வளர வேண்டும் என நான் விரும்புகிறேன். இவ்வளவு படம் எடுக்கிறார்கள், அதில் பாலிவுட் நடிகை நடிக்கிறார் என்பது எல்லாம் மகிழ்ச்சி தான்.
"ஆனால் ட்ரெய்லரில் பெண்களை காட்டிய விதம் எனக்கு பிடிக்கவில்லை. கியாரா அத்வானியை பாலிவுட்டில் இருந்து கொண்டு வந்தது இப்படி காட்டுவதற்கா?"
"பெண்களுக்கு மரியாதை இல்லை என்றால், உங்களை கர்நாடகாவை விட்டே வெளியேற்றி விடுவோம்" என ரிஷிகா பேசி இருக்கிறார்.