ஏற்கனவே எடுக்கப்பட்ட வடசென்னை 2 படத்தின் காட்சிகள் ! மீண்டும், துவங்குவது குறித்து தனுஷ் சொன்ன விஷயம்
வடசென்னை 2
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வருபவர் நடிகர் தனுஷ். இவர் நடிப்பில் விரைவில் வெளியாகவுள்ள திரைப்படம் திருச்சிற்றம்பலம். இப்படத்தை சன் பிச்சர்ஸ் தயாரித்துள்ளது.
மேலும் தனுஷ் ஹாலிவுட் நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ள The Gray Man திரைப்படம் சமீபத்தில் வெளியானது. அதில் நடிகர் தனுஷின் கதாபாத்திரம் பெரியளவில் பேசப்பட்டது.
மேலும் இப்படத்தின் ப்ரோமோஷனுக்காக நடிகர் தனுஷ் அளித்த பேட்டியில் தனது திரைப்படங்கள் குறித்த சுவாரஸ்யமான பகிர்க்கொண்டுள்ளார்.
அதன்படி வடசென்னை 2 குறித்து பேசிய தனுஷ் வடசென்னை எடுக்கும்ப்போதே வடசென்னை 2 படத்தின் 50 நிமிட காட்சிகள் எடுக்கப்பட்டு விட்டது, வடசென்னை 2 உடனே உருவாகியிருக்க வேண்டிய திரைப்படம்.
ஆனால் திடீரென வெற்றிமாறன் இந்த வடசென்னை உலகத்தில் இருந்து இடைவேளை எடுக்க விரும்பினார். அவருக்கு வேறு சில கதைகள் சொல்ல நினைத்ததால், மற்ற திரைப்படங்களை எடுக்க சென்றுவிட்டார்.
அவர் அந்த திரைப்படங்களை எடுத்து முடித்து எப்போது அவர் வடசென்னை 2 படத்தை எடுக்க நினைக்கிறாரோ உடனே சென்றுவிடுவேன் என கூறியுள்ளார்.