வடசென்னை 2 எப்போ..? வெறித்தனமான அப்டேட் கொடுத்த நடிகர் தனுஷ்
வடசென்னை
பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை, அசுரன் என வெற்றிமாறன் - தனுஷ் கூட்டணியில் இதுவரை நான்கு திரைப்படங்கள் வெளிவந்துள்ளது. ஆனால், ரசிகர்கள் அனைவரும் காத்திருப்பது வடசென்னை 2 படத்திற்காக தான்.
2018ம் ஆண்டு திரைக்கு வந்த இப்படம் ரசிகர்களால் தலைமேல் தூக்கி வைத்து கொண்டாடப்பட்டது. இப்படத்தில் தனுஷுடன் இணைந்து ஐஸ்வர்யா ராஜேஷ், ஆண்ட்ரியா, அமீர், சமுத்திரக்கனி, டேனியல் பாலாஜி, கிஷோர் என பலரும் நடித்திருந்தனர்.

இப்படத்தின் இறுதியில் அன்புவின் எழுச்சி வடசென்னை 2-வில் என வெற்றிமாறன் கூறியிருந்தார். இதனால் அப்போதில் இருந்து வடசென்னை 2 எப்போது என ரசிகர்கள் கேட்டுக்கொண்டே இருக்கிறார்கள்.
தனுஷ், வெற்றிமாறன் இருவரும் எந்த நிகழ்ச்சிக்கு சென்றாலும், பேட்டிகளிலும் தொடர்ந்து வடசென்னை 2 எப்போது என்கிற கேள்வி அவர்களை தொடர்ந்து கொண்டே இருந்தது.
வடசென்னை 2 அப்டேட்
நேற்று மாலை தனுஷின் குபேரா படத்தின் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் பல விஷயங்களை தனுஷ் பகிர்ந்துகொண்ட நிலையில், வடசென்னை 2 குறித்து வெறித்தனமான அப்டேட் கொடுத்தார்.

"2018ல் இருந்து கேட்டுகிட்டே இருக்கீங்களா அடுத்த வருஷம்" என அவரே கூறிவிட்டார். இதன்மூலம் வடசென்னை 2 அடுத்த வருடம் துவங்குகிறது என உறுதி செய்யப்பட்டுள்ளது. இதை கேட்டவுடன் ரசிகர்களின் ஆரவாரத்தில் அரங்கமே அதிர்ந்தது.
பற்றியெரியும் ஈரான்... போர்க்களமான தெருக்கள்: இந்தியாவிற்கு ஏற்பட்டுள்ள வர்த்தகப் பாதிப்பு News Lankasri
இந்தியாவுக்கு வருகைபுரியும் ஜேர்மன் சேன்ஸலர்: மீண்டும் தலையெடுக்கும் குழந்தை அரிஹா விவகாரம் News Lankasri
விண்வெளியில் எரிபொருள் நிரப்பு நிலையம் அமைக்கும் தமிழர் - விண்ணுக்கு புறப்பட்ட PSLV C62 News Lankasri