பாக்ஸ் ஆபிஸில் அடிவாங்கிய வடக்குப்பட்டி ராமசாமி.. சந்தானம் படத்திற்கு ஏற்பட்ட மோசமான நிலைமை
வடக்குப்பட்டி ராமசாமி
சந்தானம் தமிழ் சினிமாவில் முக்கியமான நடிகர்களில் ஒருவர். நகைச்சுவை நடிகராக தனது பயணத்தை துவங்கிய சந்தானம், இன்று ஹீரோவாக வளர்த்துள்ளார்.
இவர் நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த திரைப்படம் வடக்குப்பட்டி ராமசாமி. இப்படத்தை கார்த்திக் யோகி இயக்கியிருந்தார். டிக்கிலோனா படத்தின் வெற்றியை தொடர்ந்து இந்த கூட்டணி மீண்டும் வடக்குப்பட்டி ராமசாமி படத்தில் இணைந்தனர்.
கலவையான விமர்சனங்களை பெற்ற வடக்குப்பட்டி ராமசாமி திரைப்படம் முதல் மூன்று நாட்களில் வசூலில் நல்ல வரவேற்பை பெற்றது. ஆம், முதல் மூன்று நாட்கள் முடிவில் ரூ. 5.5 கோடி வரை வசூல் செய்திருந்தது.
வசூல் விவரம்
இந்நிலையில், தற்போது 6 நாட்கள் முடிவில் ரூ. 6 கோடி வரை மட்டுமே வசூல் செய்துள்ளது. கிட்டதட்ட கடந்த மூன்று நாட்களில் ரூ. 50 லட்சம் மட்டுமே மொத்த வசூலில் அதிகரித்துள்ளது.
இதன்மூலம் வடக்குப்பட்டி ராமசாமி திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் அகலபாதாளத்திற்கு சென்றுவிட்டதாக பேசப்படுகிறது. சந்தானத்தின் படத்திற்கு இப்படியொரு நிலைமையா என ரசிகர்கள் கேட்டு வருகிறார்கள்.
![அதிக சம்பளம் தரும் வேலையை விட்டு UPSC தேர்வில் வெற்றி பெற்று IPS அதிகாரியான பெண்ணின் கதை](https://cdn.ibcstack.com/article/4e34cc60-9f22-4aa1-8495-039a232e3650/25-67a9a117782a9-sm.webp)
அதிக சம்பளம் தரும் வேலையை விட்டு UPSC தேர்வில் வெற்றி பெற்று IPS அதிகாரியான பெண்ணின் கதை News Lankasri
![இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடன் பிரச்சினையால் அவஸ்தைப்படுவார்களாம்.. நீங்க என்ன நட்சத்திரம்?](https://cdn.ibcstack.com/article/9c2e0102-1d6e-4026-aa12-03fc1bc2068e/25-67a9476da76cd-sm.webp)