வாடிவாசல் படத்திற்காக சூர்யா எடுத்து வரும் பயிற்சி, வெளியான சூப்பர் தகவல்!
சூர்யா தற்போது இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் எதற்கும் துணிந்தவன் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகி பெரிய வரவேற்பை பெற்றது.
மேலும் இவர் நடிப்பில் உருவாகியுள்ள ஜெய் பீம் உட்பட அவர் தயாரித்துள்ள மேலும் மூன்று திரைப்படங்கள் அமேசான் பிரைமில் விரைவில் வெளியாகவுள்ளது.
சூர்யா அடுத்ததாக இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் திரைப்படத்தில் நடிக்க உள்ளார், இப்படம் ஜல்லிக்கட்டு விளையாட்டை மையமாக வைத்து தயாராக உள்ளது.
இந்நிலையில் வரும் அக்டோபர் மாதம் முதல் தொடங்கவுள்ள இப்படத்தின் ஷூட்டிங்கில் ஜல்லிக்கட்டு சம்மந்தப்பட்ட காட்சிகள் எடுக்கப்பட உள்ளது.
இந்த காட்சிகள் தத்ரூபமாக இருக்க வேண்டும் என்பதால் நடிகர் சூர்யா ஒரு மாதம் ஜல்லிக்கட்டு காளைகளை அடக்குவதற்காக பயிற்சி எடுக்க உள்ளாராம். செப்டம்பர் மாதம் இதற்கான பயிற்சியில் சூர்யா ஈடுபட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நிலத்தை விற்று லண்டனுக்கு படிக்க வந்த இந்திய மாணவி: கத்தியால் குத்தி படுகொலை: சிக்கிய சிசிடிவி News Lankasri