வடிவேலுவை நேரில் சந்தித்த பிரபல விஜய் டிவி நட்சத்திரங்கள், வெளியான லேட்டஸ்ட் போட்டோ..
23ஆம் புலிகேசி படத்தின் இரண்டாம் பாகத்தில் ஆரம்பித்த பிரச்சனையால், நடிகர் வடிவேலுவிற்கு அடுத்தடுத்து படங்களில் நடிக்கக்கூடாது என்று, ரெட் கார்ட் தரப்பட்டது.
இவர் நடிப்பில் கடைசியாக விஜய் நடித்த மெர்சல் திரைப்படம் வெளியானது. இதன்பின், எந்த ஒரு படத்திலும் வடிவேலுவை ரசிகர்களால் பார்க்கமுடியவில்லை.
ஆனால், தற்போது அனைத்து பிரச்சனைகளும் முடிந்துள்ள நிலையில், மீண்டும் தமிழ் திரையுலகில் ரீ என்ட்ரி கொடுக்கவிருக்கிறார் நடிகர் வடிவேலு. எல்லாம் சரியாக நடந்தால் வடிவேலு சுராஜ் இயக்கத்தில் நாய் சேகர் என்ற படத்தின் மூலம் ரீ என்ட்ரி கண்டிப்பாக கொடுப்பார்.
இந்நிலையில் தற்போது சின்னத்திரையில் பிரபலமான நட்சத்திரங்களான அசார் மற்றும் TSK வடிவேலுவை நேரில் சந்தித்துள்ளனர். வடிவேலுவின் லேட்டஸ்ட் புகைப்படம் தற்போது அவரின் ரசிகர்களிடையே பரவி வருகிறது.