அப்பா இல்லாமல் நாங்கள், வடிவேலு பாலாஜி மகனின் எமோஷ்னல் பேச்சு.. இப்படியொரு நிலைமையா?
வடிவேலு பாலாஜி
விஜய் டிவி மூலம் ஏராளமான சின்னத்திரை பிரபலங்கள் திரைத்துறையில் அறிமுகமாகியுள்ளார்கள்.
அப்படி வந்தவர்களில் ஒருவர் தான் வடிவேல் பாலாஜி. 2008ம் ஆண்டு கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி மூலம் விஜய் டிவியில் கால் பதித்தவர், அது இது எது நிகழ்ச்சியின் சிரிச்சா போச்சு மூலம் உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்களை பெற்றார்.
கலக்கப்போவது யாரு, ராஜு வீட்ல பார்ட்டி, ஸ்டார்ட் மியூசிக் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டார். கடைசியாக 2019ம் ஆண்டு ஸ்டார்ட் மியூசிக் 2 சீசனில் பங்கேற்ற அவர் 2020ம் ஆண்டு உடல்நலக் குறைவால் உயிரிழந்தார்.
மகனின் பேச்சு
வடிவேலு பாலாஜியின் மகன் ஸ்ரீகாந்த் சமீபத்தில் ஒரு பேட்டியில் அப்பா இல்லாமல் கஷ்டப்படுவதாக கூறியுள்ளார். அப்பா இருந்த வரை எந்தவிதமான கஷ்டமும் தெரியாமல் என்னை வளர்த்துவிட்டார்.
அப்பா மறைந்த பிறகு குடும்பம் மிகவும் கஷ்டப்படுகிறது, நான் இப்போது தான் ஒரு வண்டி வாங்கினேன், அதன் EMI கூட என்னால் கட்ட முடியவில்லை, அதை கட்டுவதற்கே கஷ்டப்படுகிறேன்.
அப்பா இருந்தால் இந்த கஷ்டம் எல்லாம் இல்லை. என்னோடு ஆசை இப்போது எனது அம்மாவை நன்றாக பார்த்துக்கொள்ள வேண்டும் என்பது தான் என பேசியுள்ளார்.