வாரிசு Vs துணிவு
இனி தமிழ் சினிமாவில் ஒரு இரண்டு மாதங்களுக்கு துணிவு மற்றும் வாரிசு படம் பற்றிய பேச்சுகள் தான் அதிகம் இருக்கும். படங்களின் ரிலீஸ் முன்பு வியாபாரம், திரையரஙகம் எண்ணிக்கை, புரொமோஷன் பேனர்கள், முன்பதிவு விவரங்கள் என தான் அதிகம் வரும்.
இன்று விஜய்யின் வாரிசு படத்தின் பிரம்மாண்டமான இசை வெளியீட்டு விழா நடைபெற இருக்கிறது. நிகழ்ச்சியில் என்னென்ன நடக்கப்போகிறது, விஜய் என்ன பேசப் போகிறார் என்பதை காண தான் மக்கள் அதிகம் ஆர்வமாக உள்ளனர்.
நிகழ்ச்சிக்கான வேலைகளும் சூடு பிடிக்க நடந்து வருகிறது.
வாரிசு, துணிவு பற்றி வடிவேலு
நாய் சேகர் ரிட்டன்ஸ் என்ற வெற்றிப் படத்தை கொடுத்த வடிவேலு அண்மையில் திருச்செந்தூர் முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்துள்ளார். அப்போது அவரிடம் வாரிசு அல்லது துணிவு இரண்டில் யாருடைய படத்தை முதலில் பொங்கலுக்கு பார்ப்பீர்கள் என கேட்டுள்ளனர்.
அதற்கு அவர், படங்களின் பெயரை குறிப்பிடாமல் இரண்டு படங்களும் நன்றாக ஓடட்டும், தயாரிப்பாளர்கள் லாபம் அடையட்டும் வாழ்த்துக்கள் என கூறி முடித்துள்ளார்.

பிக்பாஸ் 6 நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய தனலட்சுமியின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?