காலி சேர்.. தரையில் அமர்ந்து போட்டோ எடுத்துக்கொண்ட வடிவேலு! - இது யாருடையது சேர் தெரியுமா?
நடிகர் வடிவேலுவுக்கு தமிழ்நாட்டில் எந்த அளவுக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள் என சொல்லி தெரியவேண்டியது இல்லை. அவர் காமெடி ரோல்களில் நடித்து பல வருடங்கள் ஆகிவிட்டது என்றாலும் தற்போதும் அவரது காமெடிகள் தான் டிவி சேனல்களிலும் இணையத்திலும், மீம்களிலும் ட்ரெண்ட் ஆக இருக்கின்றன.
அவர் மாமன்னன் படத்தில் நடித்த பிறகு தனக்கு வரும் ரோல்கள் எல்லாம் சீரியசாகவே இருக்கிறது என வடிவேலு சமீபத்தில் கூறி இருந்தது உங்களுக்கு நினைவிருக்கலாம்.
கலைஞர் நினைவிடம்
சமீபத்தில் திறக்கப்பட்ட கலைஞர் கருணாநிதி நினைவிடத்திற்கு நேற்று வடிவேலு சென்று இருக்கிறார். அங்கு அவர் AI உதவி உடன் கலைஞர் அருகில் அமர்ந்து பேசி இருக்கிறார்.
அதன் பின் கலைஞரின் சேர் அருகில் அமர்ந்து அதனுடன் போட்டோ எடுத்துக்கொண்டார் வடிவேலு. அந்த போட்டோ இதோ..