கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடிய நடிகர் வடிவேலு.. இணையத்தில் வைரலாகும் புகைப்படம்..
23ஆம் புலிகேசி படத்தில் ஆரம்பித்த பிரச்சனையின் காரணமாக, நடிகர் வடிவேலுவுக்கு ரெட் கார்ட் தரப்பட்டது.
பல ஆண்டுகள் கழித்து சமீபத்தில் அவர் மீதான தடை நீக்கப்பட்டது. இதையடுத்து மீண்டும் படங்களில் நடிக்க தயாராகி வருகிறார் வடிவேலு.
அதன்படி, சுராஜ் இயக்கும் படத்தில் முதலில் நடிக்க உள்ளார் வடிவேலு. இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது.
இந்நிலையில், நடிகர் வடிவேலு இன்று தனது 62வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.
இதையொட்டி இயக்குனர் சுராஜ், நடிகர் வடிவேலுவின் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடி உள்ளார்.
இந்த கொண்டாட்டத்தின் போது எடுத்த புகைப்படத்தை நடிகர் வடிவேலு தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
வைரலாகி வரும் இந்த புகைப்படத்திற்கு லைக்குகளும் குவிந்து வருகின்றன. இதோ அந்த புகைப்படம்..
