5 கோடி நஷ்டஈடு கேட்ட வடிவேலு.. நடிகர் சிங்கமுத்துவுக்கு நீதிமன்றம் போட்ட உத்தரவு
நடிகர் வடிவேலு மற்றும் சிங்கமுத்து இருவரும் படங்களில் ஒன்றாக பல ஹிட் காமெடிகளில் நடித்தவர்கள். ஆனாலும் அவர்களுக்கு நடுவில் தற்போது கருத்து வேறுபாடு காரணமாக மோதல் இருந்து வருகிறது.
நடிகர் சிங்கமுத்து அளிக்கும் பேட்டிகளில் வடிவேலு பற்றி பல்வேறு விஷயங்களை கூறி வருகிறார். இந்நிலையில் வடிவேலு சமீபத்தில் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் சிங்கமுத்து தன்னை பற்றி துளி கூட உண்மையில்லாத பொய்களை அவதூறாக பேசி வருவதாக குற்றம்சாட்டி இருக்கிறார்.
நீதிமன்றம் உத்தரவு
தனது பெயரை கெடுக்கும் வகையில் பேட்டி கொடுத்து வரும் சிங்கமுத்து மானநஷ்ட ஈடாக 5 கோடி ருபாய் வழங்க வேண்டும் என வடிவேலு கேட்டிருக்கிறார்.
கடந்த முறை வழக்கு விசாரணைக்கு வந்தபோது சிங்கமுத்து பதில் அளிக்க உத்தரவிடப்பட்டு இருந்தது. ஆனால் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது சிங்கமுத்து தரப்பு வழக்கறிஞர் கால அவகாசம் கோரி இருந்தார். வக்காலத்து தாக்கல் செய்ய இருப்பதால் அவகாசம் அவர் கேட்டிருக்கிறார்.
அதனால் அதற்கு 2 வாரங்கள் அவகாசம் கொடுத்து, அதற்குள் சிங்கமுத்து பதில்மனு தாக்கல் செய்ய வேண்டும் எனநீதிபதி உத்தரவிட்டு இருக்கிறார்.

பல்லாயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு பிரித்தானியாவுக்குள் அனுமதி? எதிர்க்கட்சியினர் எச்சரிக்கை News Lankasri
