கேங்கர்ஸ் திரைப்படம், வடிவேலு செய்யப்போகும் சூப்பர் விஷயம்.. எதிர்ப்பார்ப்பில் ரசிகர்கள்
கேங்கர்ஸ்
சுந்தர்.சி கடைசியாக அரண்மனை 4 என்ற மாஸ் ஹிட் படத்தை கொடுத்தார்.
இப்படத்திற்கு பிறகு கலகலப்பு 3 படம் எடுப்பார் என்று பார்த்தால் அதற்கு பதில் வடிவேலுவுடன் இணைந்து புதிய படத்தை தொடங்கியுள்ளார்.
கிட்டத்தட்ட 15 ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு வடிவேலு-சுந்தர்.சி இணைவதால் ரசிகர்கள் இப்படத்தின் மேல் அதிக எதிர்ப்பார்ப்பு வைத்துள்ளனர்.
கேங்கர்ஸ் என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் வடிவேலுவுடன் சுந்தர்.சி, கேத்ரின் தெரசா, வாணி போஜன் மற்றும் பலர் நடிக்கின்றனராம்.
கெட்டப்புகள்
காமெடி கதைக்களத்தில் உருவாகும் இப்படத்தில் படப்பிடிப்புகள் நிறைவடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இதில் நடிகர் வடிவேலு 5 கதாபாத்திரங்களில் நடித்துள்ளதாகவும், அதிலும் முக்கியமாக லேடி கெட்டப்பில் நடித்துள்ளாராம்.
வடிவேலு ஏற்கனவே "பாட்டாளி, நகரம், தலைநகரம்" ஆகிய படங்களில் லேடி கெட்டப்பில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

திருபாய் அம்பானி பயன்படுத்திய கார் தற்போது தென்னகத்து சூப்பர் ஸ்டார் ஒருவருக்கு சொந்தம் News Lankasri
