வடிவேலு
மதுரையில் இருந்து தமிழ் சினிமாவிற்கு கிடைத்த மாபெரும் பொக்கிஷங்களில் ஒருவர் வைகை புயல் வடிவேலு. இவருடன் சில ஆண்டுகள் சினிமாவில் நடிக்கவில்லை என்றாலும் மீம்ஸ் மூலம் ஒவ்வொரு நாளும் நம்மை சிரிக்க வைத்து கொண்டு தான் இருந்தார்.
மீண்டும் நாய் சேகர் returns திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார். இப்படம் தோல்வியை தழுவியது. இதன்பின் மாமன்னன் திரைப்படத்தில் முதல் முறையாக சீரியஸான கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருந்தார். இப்படம் மாபெரும் அளவில் வெற்றியடைந்தது.
உருக்கமாக பேசிய வடிவேலு
நடிகர் வடிவேலுவை சினிமாவில் அறிமுகம் செய்து வைத்தது ராஜ்கிரண் என்பதை அனைவரும் அறிவார்கள். ஆனால், ராஜ்கிரணை வடிவேலு மதிப்பதில்லை என்கிற விமர்சனம் தொடர்ந்து வடிவேலு மீது வைக்கப்பட்டது.
இந்த நிலையில், சமீபத்தில் பேட்டி ஒன்றில் ராஜ்கிரண் தான் என்னை சினிமாவில் அறிமுகம் செய்து வைத்தார். என்னுடைய தாய், தந்தைக்கு பின் எனக்கு உணவு கொடுத்ததும் ராஜ்கிரண் தான் என மிகவும் உருக்கமாக பேசியுள்ளார் வடிவேலு. இந்த விஷயம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

குஞ்சுகளை வாய் வழியாக பெற்றெடுக்கும் உயிரினம் எது தெரியுமா? தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க! IBC Tamilnadu
