வடிவேலு, பகத் பாசில் நடித்துள்ள மாரீசன் படத்தின் கதை இதுதானா?
மாரீசன்
இயக்குனர் சுதீஷ் சங்கர் இயக்கத்தில் வி. கிருஷ்ணமூர்த்தி கதை, திரைக்கதை, வசனம் எழுதி, கிரியேட்டிவ் டைரக்டராக பணியாற்றியுள்ள இப்படத்தில் வடிவேலு மற்றும் பகத் பாசில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இவர்களுடன் கோவை சரளா, விவேக் பிரசன்னா, சித்தாரா, பி.எல்.தேனப்பன், லிவிங்ஸ்டன், ரேணுகா, சரவணா சுப்பையா, கிருஷ்ணா, ஹரிதா, டெலிபோன் ராஜா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பில் தயாராகியுள்ள இப்படம் வரும் ஜுலை 25ம் தேதி உலகம் முழுவதும் படம் ரிலீஸ் ஆக உள்ளது.
பட கதை
மாமன்னன் பட வெற்றிக்கு பிறகு மாரீசன் படத்தில் வடிவேலு மற்றும் பகத் பாசில் இணைந்து நடித்துள்ளதால் பெரிய எதிர்ப்பார்ப்பு உள்ளது.
அல்சைமர் நோயாளியான வடிவேலு ஒரு பணக்காரர். வடிவேலு ஏடிஎம் பயன்படுத்தும் போது அவரிடம் உள்ள பணத்தை பகத் பாசில் பார்த்துவிடுகிறார். அந்த பணத்தை எடுப்பதற்காக பகத் பாசில், வடிவேலுவை தானே பைக்கில் டிராப் செய்வதாக கூறுகிறார்.
திருவண்ணாமலை முதல் நாகர்கோவில் வரை பைக்கில் இவர்கள் செய்யும் பயணமே இந்த கதை என கூறப்படுகிறது. கடைசியில் வடிவேலுவிடம் இருந்து பகத் பாசில் பணம் பெற்றாரா இல்லையா என்பதே கதை என கூறப்படுகிறது.

குடும்பம் முக்கியம்தான்.. ஆனால் அதுக்காகவா வந்துருக்கீங்க - கோலி,ரோகித்தை சாடிய கம்பீர் IBC Tamilnadu
