5 கோடி மான நஷ்ட ஈடு கேட்டு சிங்கமுத்து மீது வழக்கு தொடர்ந்த வடிவேலு! என்ன பிரச்சனை?
நடிகர் வடிவேலு உடன் பல காமெடிகளில் நடித்து இருப்பவர் சிங்கமுத்து. அவர்கள் ஆரம்பத்தில் ஒன்றாக இருந்த நிலையில் அதன் பின் பிரச்சனை காரணமாக பிரிந்துவிட்டனர்.
அவர்கள் இடையே பிரச்சனை தொடரும் நிலையில் சிங்கமுத்து அளிக்கும் பேட்டிகளில் வடிவேலு பற்றிய பல தகவலைகளை போட்டுடைத்து வருகிறார்.
வடிவேலு போலவே ஒரு படத்தில் நடித்த நடிகரை ஆள் வைத்து அடித்தது உட்பட பல விஷயங்களை சிங்கமுத்து பேட்டிகளில் கூறி இருக்கிறார்.
வழக்கு
இந்நிலையில் சிங்கமுத்து தன்னை பற்றி பொய்யான தகவல்களை கூறி அவதூறு பரப்புகிறார் என வடிவேலு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருக்கிறார்.
பெயரை களங்கப்படுத்தியதற்காக 5 கோடி ருபாய் நஷ்டஈடு கேட்டு இருக்கிறார் வடிவேலு. இந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில் சிங்கமுத்து பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதி வழக்கை வேறு தேதிக்கு தள்ளிவைத்து இருக்கிறார்.

பல்லாயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு பிரித்தானியாவுக்குள் அனுமதி? எதிர்க்கட்சியினர் எச்சரிக்கை News Lankasri
