மீம் கிரியேட்டர்களுக்காக வைகைப்புயல் வடிவேலு செய்த விஷயம்! நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்
இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் நடிகர் வடிவேலு நாயகனாக நடித்துள்ள திரைப்படம் 'நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்'. வடிவேலுவின் கம்பேக் படமான இதில் 'குக் வித் கோமாளி' புகழ் சிவாங்கி, ரெடின் கிங்ஸ்லி, ஆனந்தராஜ், விக்னேஷ்காந்த், லொள்ளு சபா சேஷு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
லைகா புரொடக்சன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் சுபாஸ்கரன் தயாரித்துள்ள இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். சில தினங்களுக்கு முன்பு வடிவேல் பாடிய இரண்டு பாடல்களும் வெளியாகி ஹிட் அடித்துள்ளது. நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
சமீபத்தில் 'நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்' படத்தின் டிரைலர் வெளியாகி மக்களிடத்தில் நல்ல வரவேற்பு பெற்றது. இந்த திரைப்படம் வருகிற டிசம்பர் 9-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் படக்குழுவினர் தீவிரமாக புரொமோஷனில் ஈடுபட்டு வருகிறார்கள் .
மீம் கிரியேட்டர்களை சந்தித்த வடிவேலு
தற்போது நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்தின் புரொமோஷனுக்காக வடிவேல் மீம் கிரியேட்டர்ஸ் மற்றும் ரசிகர்களையும் சந்தித்துள்ளார்.
வடிவேலு நடிப்பதை நிறுத்தி பல வருடங்கள் ஆனாலும் மீம் கிரியேட்டர்ஸ் தான் அவரை இன்னமும் இணையத்தில் பாப்புலராக வைத்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


Brain Teaser Maths: சிதறும் சிந்தனை கொண்டவரால் இப்புதிரை தீர்க்க முடியாது-உங்களுக்கு முடியுமா? Manithan

கமல்ஹாசன் மன்னிப்பு கேட்க கோரி கர்நாடகாவில் வெடித்த போராட்டம் - தக்லைஃப் நிகழ்வில் பேசியது என்ன? IBC Tamilnadu

வங்கக்கடலில் வலுப்பெற்ற காற்றழுத்த தாழ்வு பகுதி.., இன்று எந்தெந்த மாவட்டங்களில் கனமழை? News Lankasri

பாதுகாப்பு அச்சுறுத்தல்... ஆயுதங்கள் வாங்கிக்குவிப்பதில் திடீர் ஆர்வம் காட்டும் ஆசிய நாடுகள் News Lankasri
