வடிவேலுவால் கடுப்பான படக்குழு.. ரீ என்ட்ரிக்கு பிறகும் இப்படி நடந்துகொள்கிறாரா
வடிவேலு
நான் சேகர் ரிட்டன்ஸ் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ரீ என்டரி கொடுத்தார் வடிவேலு. இப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக மாமன்னன், சந்திரமுகி 2 உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.
இதில் சந்திரமுகி 2 படப்பிடிப்பின் போது வடிவேலு சொன்ன நேரத்திற்கு வருவதில்லை என கூறப்படுகிறது.
கடுப்பில் படக்குழு
படத்தின் கால்ஷீட் காலை 9 மணிக்கு என்று கூறினால், முதலில் 10 மணிக்கு வருகிறேன் என்று கூறுகிறாராம். அதன்பின் 11 மணிக்குள் வருகிறேன் என்று கூறிகிறாராம்.
இதன்பின் கேட்டால் 12 மணிக்குள் வந்துவிடுகிறேன் என்று கூறுகிறாராம் வடிவேலு. 12 மணி ஆன பின் அவருக்கு போன் கால் செய்தால் ஸ்விச் ஆஃப் என வருகிறதாம்.
இப்படி செய்து வருவதால் சந்திரமுகி 2 படத்தில் இருந்து வடிவேலுவின் பல காட்சிகளை தூக்கிவிட்டதாக கூறப்படுகிறது.
சந்திரமுகி 2வில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்க, கங்கனா ரனாவத் கதாநாயகியாக நடித்து வருகிறார். மேலும் முன்னணி நட்சத்திரங்கள் ராதிகா உள்ளிட்டோரும் இப்படத்தில் நடித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
குக் வித் கோமாளி 4ல் இருந்து இந்த வாரம் வெளியேறப்போகும் முதல் போட்டியாளர்! எதிர்பார்க்காத எலிமினேஷன்