நடிகர் வடிவேலுவின் மாசான ரீ-என்ட்ரி.. கைவசம் எத்தனை படங்கள் தெரியுமா

ott vadivelu re entry
By Kathick Aug 18, 2021 09:40 AM GMT
Report

இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி படத்தின் 2-ம் பாகத்தில், நடிகர் வடிவேலு நடிக்க மறுத்ததால், தயாரிப்பாளர் சங்கம், அவருக்கு ரெட் கார்ட் விதித்தது.

இதனால், பல வருடங்களாக நடிக்காமல் இருக்கிறார். ஆனாலும், அவரது மீம்ஸ்கள் தினமும் நம்மை சிரிக்க வைத்துக்கொண்டே இருக்கிறது.

சில தினங்களுக்கு முன்பு டிடெக்டிவ் நேசமணி என்ற கதையில் வடிவேல் நடிக்க இருப்பதாக தகவல் வந்தது. பின்னர் அது வதந்தி என்று தெரிய வந்தது.

அதே போல் ஓடிடி தளத்தில் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க அழைத்து இருப்பதாகவும் பேசப்பட்டது. அதுவும் இதுவரை உறுதியாகவில்லை.

இந்நிலையில், நடிகர் வடிவேலு ஓடிடி தளத்துக்காக தயாராகும் புதிய படங்களிலும், சுராஜ் இயக்கும் ‘நாய் சேகர்’ திரைப்படத்திலும் நடிக்க உள்ளதாக புதிய தகவல் பரவி வருகிறது.

அதுமட்டுமின்றி, 10 இயக்குனர்கள் அவரிடம் கதை சொல்லி இருப்பதாகவும் கூறப்படுகிறது.

மீண்டும் திரையுலகில் ரீ-என்ட்ரி கொடுக்கும் வடிவேலுவை பார்ப்பதற்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்துகொண்டு இருக்கிறார்கள். 


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US