வடிவேலுவிற்கு வந்த பெரும் தலைவலி, மறுபடியும் முதலிலிருந்தா..!
வடிவேலும் எந்த காலத்திலும் கொண்டாடப்படும் கலைஞன்.
அவரை இந்த தமிழ் சினிமா பல வருடங்களாக தொலைத்து விட்டது. தொலைத்துவிட்டது என்பதை விட, அவர் தொலைந்துவிட்டார் என்று தான் சொல்ல வேண்டும்.
பல பிரச்சனைகளால் அவர் சினிமாவில் நடிப்பதையே தவிர்த்து வந்தார்.
தற்போது அனைத்து பிரச்சனைங்களும் நீங்கி, மீண்டும் சினிமாவில் நடிக்க தொடங்கியுள்ளார். சுராஜ் இயக்கத்தில் நாய்சேகர் என்ற படத்தில் இவர் நடிக்க முடிவெடுத்தார், ஆனால், தலைவலியே இங்கு தான்.
ஆம், நாய்சேகர் என்ற பெயரில் ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கும் படத்தில் காமெடி நடிகர் சதீஷ் ஹீரோவாக நடித்து வருகின்றார்.
இப்படத்தின் கதைக்கு இந்த டைட்டில் மிக முக்கியமாம், அப்படியிருக்க நாய்சேகர் டைட்டில் வடிவேலு படத்திற்கு கிடைக்குமா, கேட்டால் கொடுப்பார்களா என்பது கேள்விக்குறியாகியுள்ளது.