ரீ என்ட்ரி கொடுக்கும் நடிகர் வடிவேலுவின் சம்பளம் மட்டுமே இத்தனை கோடியா..! எவ்வளவு தெரியுமா
23ஆம் புலிகேசி படத்தின் இரண்டாம் பாகத்தில் ஆரம்பித்த பிரச்சனையால், நடிகர் வடிவேலுவிற்கு அடுத்தடுத்து படங்களில் நடிக்கக்கூடாது என்று, ரெட் கார்ட் தரப்பட்டது.
இவர் நடிப்பில் கடைசியாக விஜய் நடித்த மெர்சல் திரைப்படம் வெளியானது. இதன்பின், எந்த ஒரு படத்திலும் வடிவேலுவை ரசிகர்களால் பார்க்கமுடியவில்லை.
ஆனால், தற்போது அணைத்து பிரச்சனைகளும் முடிந்துள்ள நிலையில், மீண்டும் தமிழ் திரையுலகில் ரீ என்ட்ரி கொடுக்கவிருக்கிறார் நடிகர் வடிவேலு.
பல வருடங்கள் கழித்து வடிவேலு நடிக்கவிருக்கும் புதிய படம் நாய்சேகர் என்று, அவரே கூறியிருந்தார். மேலும் இப்படத்தை இயக்குனர் சுராஜ் இயக்கவுள்ளார்.
இந்நிலையில், அணைத்து பிரச்சைகளுக்கு பிறகு ரீ என்ட்ரி கொடுக்கும் நடிகர் வடிவேலுவிற்கு ரூ. 10 கோடி கோடிக்கு மேல், சம்பளம் கொடுக்க தயாரிப்பாளர்கள் தயாராக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.