சம்பளம் இல்லாம தான் நடிச்சேன்.. நடிகர் வடிவேலு ஆரம்ப கால சினிமா வாழ்க்கை
நடிகர் வடிவேலு
நடிகர் வடிவேலு நகைச்சுவை கிங் என்பதை நாம் அனைவரும் அறிவோம். 35 ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் கலக்கிக்கொண்டிருக்கும் இவர், 2017ம் ஆண்டில் இருந்து 5 ஆண்டுகள் தமிழ் சினிமாவில் தடை செய்யப்பட்டு இருந்தார்.
இதனால் எந்த திரைப்படத்திலும் நடிக்கவில்லை. பின் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தின் மூலம் கம் பேக் கொடுப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அப்படம் படுதோல்வியை சந்தித்தது. பின் மாமன்னன் படத்தின் மூலம் கம் கொடுத்தார். மேலும் இன்று சுந்தர் சி - வடிவேலு கூட்டணியில் கேங்கர்ஸ் படம் வெளிவந்துள்ளது.
ஆரம்ப கால சினிமா வாழ்க்கை
இந்த நிலையில், கேங்கர்ஸ் படத்தின் ப்ரோமோஷன் பேட்டி ஒன்றில் ராஜ்கிரண் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.
அவர் கூறியதாவது "சினிமாவுக்கு வந்த நாலு வருஷம் அவர் ஆபீஸ்லயே வச்சி வாழ வச்சவர் அவர் தான். சினிமால என்ன தூக்கி கொண்டு வந்தவர் அவர் தான். அவர் தான் என் கடவுள். அதுக்கு அப்புறம் கமல் சாரோட தேவர் மகன் தான் என் டர்னிங் பாயிண்ட். தேவர் மகன் படம் வரைக்கும் ராஜ்கிரண் ஐயா ஆபீஸ்ல தான் இருந்தேன். அவரோட 6 படம் 7 படம் சம்பளம் இல்லாம தான் நடிச்சேன்" என கூறியுள்ளார்.

viral video: சிறுவனின் மடியில் ஒய்யாரமாக ஓய்வெடுக்கும் ராட்சத மலைப்பாம்பு! மெய்சிலிர்க்கும் காட்சி Manithan
