யார் செத்தாலும் வடிவேலு வர மாட்டார்.. காட்டமாக விமர்சித்த நடிகர்
நடிகர் வடிவேலு தமிழ் சினிமாவில் முன்னணி காமெடியனாக முத்திரை பதித்து அவருக்கென ஒரு தனி இடத்தை பிடித்தவர்.
அவருடன் காமெடி காட்சிகளில் நடித்த மற்ற நடிகர்களும் பெரிய அளவில் பாப்புலர் தான். தனக்கென ஒரு டீம் வைத்துக்கொண்டு படங்களில் காமெடி காட்சிகளில் வடிவேலு நடித்து வருகிறார்.
அப்படி அவருடன் இருந்த பல நடிகர்கள் தற்போது பணம் இல்லாமல் வறுமையில் இருக்கின்றனர். நடிகர் போண்டா மணி கடந்த வருடம் இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்து சிகிச்சையில் இருந்த போது பண உதவி கேட்டு வீடியோ வெளியிட்ட்டார். அவருக்கு தனுஷ், விஜய் சேதுபதி உள்ளிட்ட நடிகர்கள் பண உதவி செய்தனர். ஆனால் வடிவேலு ஒரு ருபாய் கூட கொடுத்து உதவவில்லையாம்.
யார் செத்தாலும் வர மாட்டார்
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு நடிகர் போண்டா மணி வீட்டில் மயங்கி விழுந்த நிலையில் ஹாஸ்பிடலுக்கு தூக்கி சென்றிருக்கின்றனர். ஆனால் அவர் இறந்துவிட்டார்.
அவரது இறுதி சடங்குகள் நேற்று நடந்தது. அதில் பல முக்கிய துணை காமெடியன்கள், நடிகர்கள் நேரில் சென்று இறுதி அஞ்சலி செலுத்தினார்கள்.
ஆனால் வடிவேலு வரவில்லை. இதை குறிப்பிட்டு பல நடிகர்கள் விமர்சித்து உள்ளனர். 'வடிவேலு யார் செத்தாலும் வர மாட்டார்' என நடிகர் சாரபாம்பு சுப்புராஜ் பேட்டி கொடுத்திருக்கிறார்.

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri
