தளபதி விஜய் நடித்த படத்தில், முதன் முதலில் ஹீரோவாக நடிக்கவிருந்த வடிவேலு..

vijay vadivelu simran ezhil thullatha manamum thullum
By Kathick Nov 28, 2021 10:30 AM GMT
Report

தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறந்து வரும் முன்னணி நட்சத்திர நாயகர்களில் ஒருவர் தளபதி விஜய்.

இவருடைய நடிப்பில் தற்போது பீஸ்ட் படம் உருவாகி வருகிறது. இப்பட,ம் அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் வெளியாகும் என தெரிவிக்கின்றனர்.

நடிகர் விஜய்யுடன் இணைந்து காமெடியில் கலக்கிய நபர், வடிவேலு. இவர்கள் இருவரும் இணைந்து நடித்த பல படங்களில் இவருடைய காம்போ பெரிதளவில் பேசப்பட்டுள்ளது.

ஆம், Friends, வசீகரா, சச்சின், வில்லு, போக்கிரி, மெர்சல், உள்ளிட்ட படங்களை அதற்கு உதாரணமாக கூறலாம்.

நடிகர் விஜய் நடிப்பில் கடந்த 1999ஆம் ஆண்டு வெளியான படம் துள்ளாத மனமும் துள்ளும்.

இந்நிலையில் இந்த படத்தில் முதன் முதலில் விஜய் நடித்துள்ள ஹீரோ கதாபாத்திரத்தில் நடிக்கவிருந்தது வடிவேலு தானாம்.

வடிவேலுவை வைத்து இப்படத்தை தயாரிக்க, எந்த ஒரு தயாரிப்பாளரும் முன் வாராத காரணத்தினால், இதனை ஹீரோ சப்ஜெக்ட் படமாக மாற்றி, விஜய்யை வைத்து எடுத்ததாக. இயக்குனர் எழில் ஒரு பேட்டியில் குறிப்பிட்டு கூறியுள்ளார்.


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US