வைகைப்புயல் வடிவேலுவின் அடுத்த பிரம்மாண்டம் ! இயக்குனருடன் அவர் எடுத்துக்கொண்ட புகைப்படம்..
தமிழ் சினிமாவின் நகைச்சுவை நடிகரான வடிவேலு பல வருடங்கள் கழித்து தற்போது மீண்டும் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
அதன்படி தற்போது அவர் நாய் சேகர் Returns திரைப்படத்தில் நடித்து வருகிறார், இப்படத்தை தொடர்ந்து மாமன்னன் படத்தில் நடிக்கவுள்ளார்.
மேலும் பல வருடங்களுக்கு பிறகு மீண்டும் ரஜினியுடன் தலைவர் 169 படத்தில் நடிக்கவுள்ளதாகவும் தகவல் பரவி வந்தது.
இந்நிலையில் தற்போது இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் மாமன்னன் என்ற திரைப்படம் பிரமாண்டமாக உருவாகவுள்ளது. இப்படத்தில் வடிவேலு, கீர்த்தி சுரேஷ், பகத் பாசில் உள்ளிட்டோரும் நடிக்கவுள்ளனர்.
இப்படத்தின் தொடக்க விழா இன்று நடைபெற்று போஸ்டரும் வெளியிட்டு இருந்தனர்.
மேலும் தற்போது இயக்குனர் மாரி செல்வராஜ் நடிகர் வடிவேலுவை சந்தித்த போது எடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதை கண்ட அவரின் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
ஒரு தொடர் கனவை நிறைவடைந்தது? மாமன்னனில் வைகைபுயல் ? pic.twitter.com/wgv6NqRDa5
— Mari Selvaraj (@mari_selvaraj) March 4, 2022