மறைந்த நடிகர் விவேக் குறித்து பேசிய நடிகர் வடிவேலு.. என்ன சொன்னார் தெரியுமா
23ஆம் புலிகேசி படத்தின் இரண்டாம் பாகத்தில் ஆரம்பித்த பிரச்சனையால், நடிகர் வடிவேலுவிற்கு அடுத்தடுத்து படங்களில் நடிக்கக்கூடாது என்று, ரெட் கார்ட் தரப்பட்டது.
இதன்பின் பல ஆண்டுகள் கழித்து மீண்டும் தற்போது தமிழ் திரையுலகிற்கு நடிக்க வந்துள்ளார் நடிகர் வடிவேலு, இப்படத்தை சுராஜ் இயக்கவுள்ளார்.
லைக்கா தயாரிப்பில் உருவாகவிருக்கும் இப்படத்திற்கான தயாரிப்பாளர்கள் சந்திப்பு நேற்று நடந்தது. இதில் பல விஷயங்களை நம்முடன் நடிகர் வடிவேலு பகிர்ந்துகொண்டார்.
அதில், " ஆண்டவன் புண்ணியத்தில் எனக்கு தற்போது பட வாய்ப்புகள் வந்து கொண்டு இருக்கிறது. தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி. திமுக ஆட்சி சிறப்பாக இருக்கிறது.
விவேக் எனக்கு அருமையான நண்பர். அவரது இழப்பை மறக்க முடியாது. மிகப்பெரிய வேதனை. விவேக் இடத்தையும் நிரப்ப வேண்டிய சூழ்நிலையில் நான் இருக்கிறேன் " என்று கூறியுள்ளார்.