பழம்பெரும் நடிகை வைஜெந்தி மாலா உடல்நிலை குறித்து பரவிய வதந்தி.. உண்மை என்ன தெரியுமா
வைஜெந்தி மாலா
இந்திய சினிமாவில் புகழ்பெற்ற நடிகைகளில் ஒருவர் வைஜெந்தி மாலா. இவர் இந்தியாவின் 3வது மிகப்பெரிய விருதாக கருதப்படும் பத்மபூஷன் விருது பெற்றவர் ஆவர். சினிமாவில் நடிகையாக மட்டுமல்லாமல் பரத நாட்டிய கலைஞராகவும் வைஜெந்தி மாலா அறியப்படுகிறார்.
1949ம் ஆண்டு வெளிவந்த வாழ்க்கை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார். இதை தொடர்ந்து தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என பல்வேறு மொழிகளில் நடித்து வந்தார்.
1995ல் வெளிவந்த தேவதாஸ் படத்தில் சந்திரமுகி கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் இந்தியளவில் கவனத்தை பெற்றார். ரசிகர்களின் பேராதரவை பெற்ற நடிகை வைஜெந்தி மாலா பாலிவுட் நடிகர் ராஜ்கபூரின் குடும்ப மருத்துவர் சமன்லால் பாலியை திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பின் சினிமாவிலிருந்து விலகினார். சினிமா மட்டுமின்றி அரசியலிலும் வலம் வந்தார்.
வதந்திக்கு முற்றுப்புள்ளி
91 வயதான நடிகை வைஜெந்தி மாலாவின் உடல்நிலை குறித்து வதந்திகள் பரவி வந்த நிலையில், இதுகுறித்து அவரது மகன் சுசீந்திர பாலி விளக்கம் கொடுத்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இதில் " வைஜெந்தி மாலா நன்றாக உடல்நலத்துடன் ஆரோக்கியமாக இருக்கிறார். அவரைப்பற்றி வரும் தகவல்கள் வதந்தியே. செய்தியை பகிர்வதற்கு முன் சரிபார்க்கவும்" என கூறியுள்ளார். இதன்மூலம், வைஜெந்தி மாலா குறித்து பரவிய வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

லாபத்தில் வந்த பணம்.., ஊழியர்களுக்கு பைக்குகள், தங்க நாணயங்கள் கொடுத்து அசத்திய டிராவல்ஸ் உரிமையாளர் News Lankasri

சிவில் சர்வீஸ் தேர்வில் தமிழகத்தில் முதலிடம் பிடித்த ஐஏஎஸ் அதிகாரி.., தற்போது ஆட்சியராக நியமனம் News Lankasri
