கவிஞர், பாடலாசிரியர் வைரமுத்துவின் தாய் காலமானார்.. ஷாக்கிங் தகவல்
வைரமுத்து
தமிழ் சினிமாவின் பெருமைகளில் ஒன்று கவிஞர் வைரமுத்து. சாகித்ய அகாடமி விருது, பத்மஸ்ரீ, பத்ம பூஷண், சாதனா சம்மான் விருது, 7 தேசிய விருது உள்ளிட்ட ஏராளமான விருது வென்று குவித்துள்ளார். சினிமாவில் இவர் 7000க்கும் மேற்பட்ட பாடல்களுக்கு வரிகள் எழுதியுள்ளார்.
வைரமுத்துவின் தாய் மரணம்
இந்த நிலையில், கவிஞர் வைரமுத்துவின் தாயார் அங்கம்மாள் வயது மூப்பு காரணமாக நேற்று மாலை காலமானார். இதுகுறித்து வைரமுத்து தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.
அவர் கூறியிருப்பதாவது "என்னைப் பெற்ற அன்னை திருமதி அங்கம்மாள் அவர்கள் இன்று சனிக்கிழமை மாலை இயற்கை எய்தினார் என்பதை ஆழ்ந்த வருத்தத்தோடு அறிவிக்கிறேன் இறுதிச் சடங்குகள் தேனி மாவட்டம் வடுகபட்டியில் நாளை ஞாயிறு மாலை நடைபெறும்" என அவர் தெரிவித்துள்ளார்.
வைரமுத்துவின் தாய் மறைவுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது இரங்கலை தெரிவித்துள்ளார். மேலும் திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் தங்களது இரங்கலை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வருகிறார்கள்.
என்னைப் பெற்ற அன்னை
— வைரமுத்து (@Vairamuthu) May 10, 2025
திருமதி அங்கம்மாள் அவர்கள்
இன்று சனிக்கிழமை மாலை
இயற்கை எய்தினார் என்பதை
ஆழ்ந்த வருத்தத்தோடு
அறிவிக்கிறேன்
இறுதிச் சடங்குகள்
தேனி மாவட்டம் வடுகபட்டியில்
நாளை ஞாயிறு மாலை
நடைபெறும் pic.twitter.com/bbBpOeFHjx