வலிமை படத்தில் தல அஜித்தின் பெயர் இது தானா! மாஸ் தகவல்
தல அஜித் நடிப்பில் இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள வலிமை திரைப்படம், இந்தியளவில் மிக பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
நீண்ட நாள் காத்திருப்பிற்கு பின் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகி இணையத்தில் செம வைரலானது.
மேலும் வலிமை படத்தின் பர்ஸ்ட் சிங்கள் நேற்று எந்த ஒரு முன் அறிவிப்புமின்றி வெளியிடப்பட்டது, இரவு 10.45 மணிக்கு வெளியான நாங்க வேற மாறி பாடல் இணையத்தில் ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது.
இந்நிலையில் வலிமை படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்கும் தல கதாபாத்திரத்தின் பெயர் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
ஆம், இப்படத்தில் தல அஜித்தின் பெயர் 'அர்ஜுன் குமார்' என்பது தெரியவந்துள்ளது. செம இளைமையான லுக்கில் தல அஜித் இதில் வருவதால் ரசிகர்கள் வலிமை படத்தை காண ஆர்வத்தோடு உள்ளனர்.
இந்தியாவிற்கு புறப்படவிருந்த ஈரானிய சரக்கு விமானம் மீது வான்வழித் தாக்குதல் நடத்திய அமெரிக்கா News Lankasri
ஈரான் ட்ரோன் தாக்குதலில் சிக்கிய மிகப்பெரிய எண்ணெய் கப்பல்: பதிலடியால் மிரள வைத்த ட்ரம்ப் News Lankasri