காதலர் தின ஸ்பெஷல்- காதலித்து திருமணம் செய்துகொண்ட சீரியல் ஜோடிகள், யாரெல்லாம் பாருங்க
காதலர் தினம்
ஒவ்வொரு மாதத்தில் மக்கள் கொண்டாடும் வகையில் ஸ்பெஷல் தினங்கள் இருக்கிறது.
ஜனவரி எடுத்தால் நியூ இயர், பொங்கல் என வரும். பிப்ரவரி மாதம் எடுத்தால் உலகமே ஒரு தினத்தை ஸ்பெஷலாக கொண்டாடும், அது என்ன எல்லோருக்கும் எதிர்ப்பார்க்கும் நாள் தான் நாளை வருகிறது.
காதலர் தினம், எனவே புது ஜோடிகள் இணைவார்கள், பழைய ஜோடிகள் பரிசுகள் கொடுத்து கொண்டாடுவார்கள்.
தற்போது நாம் இந்த பதிவில் கடந்த சில வருடங்களில் காதலித்து திருமணம் செய்துகொண்ட சின்னத்திரை ஜோடிகள் பற்றிய விவரத்தை தான் காண உள்ளோம்.
கண்மணி-அஸ்வந்த்
பாரதி கண்ணம்மா சீரியல் மூலம் மக்களிடம் பிரபலமானவர் கண்மணி மனோகரன். இவர் அண்மையில் தொகுப்பாளர் அஸ்வந்த்தை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் திருமணம் செய்துகொண்டார்.
சித்து-ஸ்ரேயா
திருமணம் சீரியலில் நடிக்கும் போது காதல் ஏற்பட 2021ம் ஆண்டு திருமணம் செய்தனர்.
பிரிட்டோ-சந்தியா
தவமாய் தவமிருந்து சீரியலில் நடித்து பிரபலமான பிரிட்டோ மற்றும் சந்தியா இருவரும் காதலித்து கடந்த 2023ம் ஆண்டு ரியல் ஜோடியாக மாறினர்.
ரேஷ்மா-மதன்
சீரியல்களில் ஒன்றாக நடிக்கும் போது காதல் ஏற்பட 2021ல் திருமணம் செய்து கொண்டனர்.
ஸ்ரித்திகா-ஆரியன்
நாதஸ்வரம் சீரியல் நடிகையான இவர் நடிகர் ஆரியனை காதலிக்க இருவரும் கடந்த ஆண்டு திருமணம் செய்துகொண்டனர்.
வெற்றி வசந்த்-வைஷு
சிறகடிக்க ஆசை சீரியல் மூலம் பிரபலமான வெற்றி வசந்த் பொன்னி சீரியல் நாயகி வைஷுவை காதலித்து கடந்த ஆண்டு திருமணம் செய்துகொண்டார்.
இவர்களை தாண்டி ஆர்யன்-ஷபானா, செந்தில்-ஸ்ரீஜா, சுரேந்தர்-நிவேதிதா பங்கஜ், ஆல்யா மானசா-சஞ்சீவ் என பெரிய லிஸ்ட் உள்ளது.