விரைவில் வலிமை படத்தின் First லுக் ரிலீஸ், ஒருவழியாக அஜித் ரசிகர்களுக்கு கிடைக்கவுள்ள அப்டேட்!
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான தல அஜித் நடிப்பில் இயக்குனர் எச். வினோத் இயக்கத்தில் உருவாகி வந்த திரைப்படம் தான் வலிமை, இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு பெரியளவில் உள்ளது.
அந்த வகையில் தல அஜித் ரசிகர்களும் இப்படத்தின் அப்டேட்டை கேட்டு வந்த நிலையில் ஒரு வழியாக அஜித்தின் பிறந்தநாள் அன்று First லுக் போஸ்டர் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.
ஆனால் கொரோனா இரண்டாவது அலை காரணமாக First லுக் போஸ்டர் வெளியாகாது, என அப்படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் அறிவித்தார்.
இந்நிலையில் விஜய் படத்தின் First லுக் வெளியானதில் இருந்து சோகத்தில் இருந்து வந்த அஜித் ரசிகர்களை உற்சாக படுத்தும் வகையில் வலிமை படம் குறித்த தகவல் இணையத்தில் பரவி வருகிறது.
ஆம், வலிமை படத்தின் First லுக் மிக விரைவில் தமிழகத்தில் திரையரங்குகள் திறக்கப்பட்டவுடன் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் அந்த First லுக் போஸ்டர் உடன் வலிமை படத்தின் ரிலீஸ் தேதியும் சேர்த்து அறிவிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளதாம்.