வலிமை ட்ரைலர் குறித்து இறுதியாக வெளியான அப்டேட்! எப்போது தெரியுமா?
அஜித்தின் நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் உருவாகியுள்ள திரைப்படம் வலிமை.
எச். வினோத் இயக்கியுள்ள இப்படத்தை போனி கபூர் தயாரித்துள்ளார். இப்படத்தில் அஜித்துடன் இணைந்து ஹுமா குரேஷி, கார்த்திகேயா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
இப்படத்தில் இருந்து வெளிவந்த Gilmpse வீடியோ, வேற மாறி, மதர் சாங், மேக்கிங் வீடியோ உள்ளிட்ட அனைத்தும் ரசிகர்களின் மனதை கவர்ந்தது.
இதனை தொடர்ந்து இப்படத்தின் மூன்றாவது சிங்கிள் மற்றும் டிரைலருக்காக தான் அஜித்தின் ரசிகர்கள் அனைவரும் காத்துகொண்டு இருக்கிறார்கள்.
இந்நிலையில் தற்போது வலிமை படத்தின் ட்ரைலர் இந்த வாரம் வெளியாகலாம் என்ற தகவல் ஒன்று இணையத்தில் பரவி வருகிறது.
இது குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வரும் வரை பொறுத்திருந்து பார்ப்போம்.