வலிமை படத்தின் கடைசி படப்பிடிப்பு, எப்போது நடக்கிறது தெரியுமா?
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான தல அஜித் நடிப்பில் இயக்குனர் எச். வினோத் இயக்கத்தில் உருவாகி வந்த திரைப்படம் தான் வலிமை, இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு பெரியளவில் உள்ளது.
மேலும் தல அஜித்தின் பிறந்தநாள் அன்று First லுக் போஸ்டர் வெளியாகவிருந்த நிலையில், கொரோனா இரண்டாவது அலை காரணமாக தள்ளி வைக்கப்பட்டது.
இதனிடையே வலிமை படத்தின் பர்ஸ்ட் லுக் நீண்ட நாள் காத்திருப்பிற்கு பிறகு வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெளியாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் தற்போது வலிமை படத்தின் Patch Work ஷூட்டிங் ஹைதெராபாத்தில் நான்கு நாட்கள் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் அந்த படப்பிடிப்பு வரும் ஜூலை 13 ஆம் தேதி முதல் தொடங்கும் என கூறப்படுகிறது. இதனால் தற்போது ரசிகர்கள் பர்ஸ்ட் லுக் வெளியாகுமா என கேட்டு வருகின்றனர்.