வலிமை படத்தின் இறுதிக்கட்ட ஷூட்டிங், படக்குழு எடுத்துள்ள அதிரடி முடிவு
தல அஜித் நடிப்பில் இயக்குனர் எச். வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் தான் வலிமை, இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு பெரியளவில் உள்ளது.
கடந்த 2 வருடங்கள் காத்திருப்பிற்கு பின் வலிமை படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் சில போஸ்டர்களை வெளியிட்டுள்ளனர்.
மேலும் ரசிகர்களிடையே பெரிய பெற்றுள்ள வலிமை பட மோஷன் போஸ்டர் யூடியூப்பில் ட்ரெண்டாகி லைக்ஸ்களை குவித்து வருகிறது.
நேற்று கூட மோஷன் போஸ்டர் 10 மில்லியன் பார்வைகளை பெற்றுள்ளதை கொண்டாடும் வகையில் படக்குழு வலிமை பட புதிய புகைப்படங்களை வெளியிட்டது.
இந்நிலையில் வலிமை படக்குழுவினர் இறுதிகட்டப் படப்பிடிப்புக்காக விரைவில் வெளிநாடு செல்ல திட்டமிட்டுள்ளதாகவும், இதற்கான அனுமதி பெறும் வேலைகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.
சமீபத்தில் ஹைதராபாத்தில் 4 நாட்கள் படப்பிடிப்பை முடித்துக்கொண்டு படக்குழு சென்னை திரும்பியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.