வலிமை படத்தின் 100 கோடி வசூலை உறுதி செய்த அப்படத்தின் கதாநாயகி ஹுமா குரேஷி !
இந்தியளவில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படங்களில் ஒன்றாக இருந்தது நடிகர் அஜித்தின் வலிமை.
இயக்குனர் வினோத் - அஜித் கூட்டணியில் சமீபத்தில் வெளியாகியுள்ள வலிமை திரைப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களிடையேயும் பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.
வலிமை திரைப்படம் வெளியானது முதல் தமிழ்நாடு மட்டுமின்றி பல இடங்களிலும் பெரியளவில் வசூல் சாதனைகளை படைத்து வந்துள்ளது.
அதன்படி சமீபத்தில் கூட இப்படம் மூன்றே நாட்களில் 100 கோடி வசூல் குவித்துள்ளதாக தகவல் பரவி வந்தன. ஆனால் அதிகாரப்பூர்வமான எந்தஒரு அப்டேட்டும் வெளியாகவில்லை.
இதனிடையே தற்போது வலிமை படத்தின் கதாநாயகியாக நடித்திருந்த நடிகை ஹுமா குரேஷி வலிமை திரைப்படம் 100 கோடி வசூல் செய்துள்ளதை அவரே தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
Woo hoo ! Thank you for all the love #Valimai #AjithSir @BoneyKapoor pic.twitter.com/Vl8OLu32pQ
— Huma S Qureshi (@humasqureshi) February 27, 2022