வலிமை ஷூட்டிங்கில் தல அஜித்திற்கு ஏற்பட்ட விபத்து! முதல்முறையாக எச்.வினோத் கூறிய தகவல்..

valimai ajithkumar H.vionth
By Jeeva Oct 07, 2021 09:00 AM GMT
Report

இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் தல அஜித் நடிப்பில் உருவாகியுள்ள வலிமை திரைப்படம் அனைவரிடமும் மிக பெரியளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் சமீபத்தில் வலிமை திரைப்படம் வரும் பொங்கல் அன்று வெளியாகும் என Glimpse வீடியோவுடன் அறிவிக்க பட்டிருந்தது.

இந்நிலையில் இயக்குனர் எச்.வினோத் பத்திரிகை ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளார். அப்போது வலிமை படம் குறித்த பல சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்துகொண்டுள்ளார்.

அதன்படி ஷூட்டிங்கில் தல அஜித்திற்கு நடந்த விபத்து குறித்தும் பேசியுள்ளார். அவர் கூறியதாவது "ஹைதராபாத்தில் புதிய நெடுஞ்சாலையில் சேஸிங் காட்சிகள் ஷூட் பண்ணினோம். ஒரு வீலிங் பண்ற ஷாட்டில் ரோட்ல கிடந்த கல்லுல டயர் இடறி, அஜித் சார் கீழ விழுந்துட்டார்.

வேகமாக வந்து விழுந்ததால் அவருக்கு கை, கால்ல எல்லாம் சதை பிய்ந்துபோகிற அளவுக்குக் காயம் ஏற்பட்டது. தொலைவில் இருந்த நாங்கள் வேகமாக அங்கு சென்று பார்த்தபோது உடைஞ்சு கிடந்த பைக்கையே அஜித் சார் சோகமா பார்த்துட்டிருந்தார்.

சார் 'உங்களுக்கு ஒண்ணும் பிரச்னை இல்லையே’ன்னு கேட்டேன். அதற்கு அவர் "எனக்கு ஒண்ணும் இல்ல. பைக்தான் உடைஞ்சுடுச்சு. நாளைக்கு ஷூட்டுக்கு என்ன பண்றது?’ன்னு திருப்பிக் கேட்டார்.

ரைடிங் கியரைக் கழற்றிய பிறகுதான், அவருக்கு அடிபட்டிருக்கறது எல்லோருக்கும் தெரிஞ்சுது. ரொம்பவே கவலைப்பட்டோம்". 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US