வலிமை திரைப்படத்தில் மொத்தம் எத்தனை சண்டை காட்சிகள் தெரியுமா? வெளியான செம மாஸ் தகவல்
தல அஜித் குமார் தற்போது திரைப்படங்களில் நடிப்பது மட்டுமின்றி தனக்கு பிடித்த பல்வேறு விஷயங்களை செய்து வருகிறார்.
மேலும் கடைசியாக இவர் நடிப்பில் வெளியான விஸ்வாசம் மற்றும் நேர்கொண்ட பார்வை உள்ளிட்ட திரைப்படங்கள் மிக பெரிய வசூல் சாதனை படைத்தது.
அதனை தொடர்ந்து தல அஜித் இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் வலிமை திரைப்படத்தில் நடித்து வந்தார். இப்படத்தின் முதல் பார்வை மே 1 ஆம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பர்ஸ்ட் லுக் வெளியீடு தேதி தள்ளி வைக்கப்பட்டது.
இதனிடையே வலிமை படத்தில் அமைந்துள்ள சண்டை காட்சிகள் குறித்த விவரம் வெளியாகியுள்ளது. வலிமை படத்தின் முதல் பாதியில் ஐந்து சண்டை காட்சிகளும், இரண்டாம் பாதியில் மூன்று சண்டை காட்சிகளும் உள்ளதாம்.
ஹாலிவுட் ஸ்டைல் சண்டை காட்சிகளில் அசத்தியுள்ளாராம் அஜித், மேலும் ஒரு சில சண்டை காட்சிகளில் அஜித்திற்கு ரத்த காயம் ஏற்பட்டதாம்.